இராமாயண இரயில் யாத்திரை
இராமாயண இரயில் யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சூன் மாதத்தில் தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, அயோத்தி போன்ற இராமாயணம் தொடர்புடைய தலங்கள் வழியாகப் பயணித்து, இறுதியில் இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி அடைகிறது. பின்னர் மீண்டும் தில்லி செல்கிறது.[1] [2] இந்த யாத்திரை தில்லியில் தொடங்கி தில்லியில் முடிவடைகிறது. 2025ஆம் ஆண்டில் இராமயண இரயில் யாத்திரை 21 சூன் 2025 அன்று தொடங்குகிறது.
பயண வசதிகள் & கட்டணம்
[தொகு]இந்த இரயில் முழுவதும் மூன்றாம் வகுப்பு குளிர்பதனம் செய்யப்பட்ட 11 பெட்டிகளைக் கொண்டது. இராமாயண யாத்திரை 18 நாள்கள் (17 இரவுகள் + 18 பகல்) கொண்டது. மூன்று வேளை சைவ உணவுகளை சமைத்து வழங்க ஒரு சமையல் கூடம், பயணிகள் அமர்ந்து சாப்பிட ஒரு கூடம் இந்த இரயிலில் உள்ளது. 18 நாள் பயணம் செல்ல, நபர் ஒருவருக்கு சுமார் ரூபாய்.65,000 செலவாகும் எனப்படுகிறது. தனி நபராக அறையில் தங்க கட்டணம் ரூ.71,820, இரண்டு நபர் அல்லது மூன்று நபர் அறையில் தங்க ரூ.62,370 மற்றும் 5 முதல் 11 வயது வரையான குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.56,700 வசூலிக்கப்படுகிறது.
யாத்திரைத் தலங்கள்
[தொகு]- அயோத்தி இராமர் கோயில் - (ராம ஜென்ம பூமி)
- அயோத்தி அனுமார் கோயில்
- நந்திகிராமம், அயோத்தி
- ஜானகி கோயில், ஜனக்பூர், நேபாளம்
- வாரணாசி - காசி விசுவநாதர் கோயில்
- கங்கா ஆரத்தி
- சீதாமரி (சீதை சமாதி)
- பிரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்
- கிட்கிந்தை
- சித்திரகூடம்
- பஞ்சவடி
- ஹம்பி
- இராமேஸ்வரம்
- தனுஷ்கோடி