இராமாயணம் (பஃறொடை வெண்பா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஃறொடை வெண்பாவாலான இராமாயணம் [1] என்னும் நூலை யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூல் [2] [3] குறிப்பிடுகிறது. கம்பராமாயணம் விருத்தப் பாவால் ஆன நூல். இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. இந்தப் 'பஃறொடை வெண்பா இராமாயணம்' அதற்கும் முந்தியது. பாரதக் கதை கூறும் பாரத வெண்பா என்னுப் நூல் இருந்தது போல இராமாயணத்துக்கும் இருந்த வெண்பா நூல் இது.

5, 6, 7, 8, 9, 12 அடிகளைக் கொண்டு வரும் பஃறொடை வெண்பாக்களுக்கு எடுத்துக்காட்டுப் பாடல்கள் தந்த பின்னர் கீழ் வரும் குறிப்பு யாப்பருங்கல விருத்தி உரைநூலில் உள்ளது.

"இன்னும் பல அடியான் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராண சாகரமும் முதலாக உடைய செய்யுள்களில் கண்டுகொள்க"

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 314. 
  2. பதிப்பாசிரியர் வித்துவான் மே. வி. வேணுகோபால் பிள்ளை (பதிப்பு 1900). அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்). சென்னை: சென்னை அரசாங்கத்திற்காக தென்மொழி சென்னை எழுதுபொருள் அச்சகத் தொழில் கட்டுப்பாட்டு அதிகாரியான் பதிப்பிக்கப்பட்டது பதிப்புநூல் வரிசை 66. பக். 195. 
  3. யாப்பருங்கலம் நூற்பா 62 உரை