இராமராஜ பூஷன்
இராமராஜ பூஷன் (Ramarajabhushan)(பொ.ச. 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) ஒரு தெலுங்குக் கவிஞரும் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞருமாவார். விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் அரசவையில் "அஷ்டதிகஜங்கள்" எனும் கவிஞர்கள் குழுவில் ஒருவராக இருந்தார். இவர் 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சாலிவாகன ஆண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவரது புத்தகங்களில் வசுச்சரித்ரமு, அரிச்சந்திர நளோபாக்யனமு, காவ்யலங்காரசங்கிரகமு, நரசபூபாலேயமு ஆகியவை அடங்கும். இவற்றில், "வசுசரித்திரமு" மிகவும் பிரபலமானது. [1]
சுயசரிதை
[தொகு]நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது இளமை பருவத்தில் அல்லசாணி பெத்தண்ணாவிடம் [2] பயிற்சி பெற்றவர் என்றும் நம்பப்பட்டது. பின்னர் இவரை கிருஷ்ணதேவராயனும் அவரது வாரிசுகளும் ஆதரித்தனர். இவரது உண்மையான பெயர் பட்டு மூர்த்தி, அவர் அலிய ராம ராயனின் [3] அரசவையில் இரத்தினமாக இருந்ததால் இவர் 'இராமராஜ பூஷன்' என்று அறியப்பட்டார். இவர் ஒரு புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞராவார்.
படைப்புகள்
[தொகு]காவியலங்காரசங்கிரகமு, அரிசந்திர நளோபாக்யானமு, நரசபூபாலேயமு போன்றவை இவரது பிரபலமான படைப்புகள். இவர், 'அரிச்சந்திர நளோபாக்கியனமு' என்ற படைப்பை திருமலை தேவ ராயனுக்கும் 'வசுசரித்ரமு'வை நரசராயனுக்கும் அர்ப்பணித்தார்
நடை
[தொகு]சிலேடை அல்லது இரட்டை அர்த்தத்தைப் பயன்படுத்தி இவர் இயற்றிய "வசுசரித்திரமு" என்ற படைப்பு மிகவும் பிரபலமானது. இந்தக் கவிதைகளை பின்னர் சேமகுரா வெங்கட கவி உட்பட பல தெலுங்கு கவிஞர்களால் பின்பற்றப்பட்டன.
பிங்கலி சூரண்ணாவின் படைப்புகளை பின்பற்றி "அரிசந்திர நளோபாக்யானமு" என்ற தவ்யார்த்தி ( இரட்டைப் பொருள்) படைப்பையும் எழுதினார். கதையின் ஒவ்வொரு கவிதையிலும் அரிச்சந்திரன் மற்றும் நளன் ஆகிய மன்னர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இவர் ஒரு இசைக்கலைஞராகவும் இருந்ததால், இவரது சில கவிதைகள் இசையமைப்புகளுகேற்ற இசை ஓட்டமும் தாளமும் இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sonti, Venkata Suryanarayana Rao. "Panchakavyas in Telugu Literature". mihira.com. Archived from the original on 3 May 2005. பார்க்கப்பட்ட நாள் 2 March 2008.
- ↑ "Allasani Peddana". vedapanditulu.net. Archived from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2008.
- ↑ Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.41
வெளி இணைப்புகள்
[தொகு]- Bhattumurthy
- Telugu literature
- K.A. Nilakanta Sastry, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, New Delhi (Reprinted 2002) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8
- Golden age of Telugu Literature
- Literary activity in Vijayanagara Empire