உள்ளடக்கத்துக்குச் செல்

இராமரஞ்சன் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமரஞ்சன் முகர்சி
Ramaranjan Mukherji
பிறப்பு1 சனவரி 1928
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்புMarch 13, 2010(2010-03-13) (aged 82)
பணிகல்வியாளர், எழுத்தாளர்
விருதுகள்பத்மசிறீ
ஹிரோசிமா அமைதி விருது
இந்திய அரசின் கௌரவம்
விசுவ பாரதி விருது
வலைத்தளம்
Official web site

இராமரஞ்சன் முகர்ஜி (Ramaranjan Mukherji) (1 ஜனவரி 1928 – 13 மார்ச் 2010) இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளரும், கல்வியாளரும், இந்தியவியல் அறிஞரும், இராஷ்ட்ரிய சமசுகிருத வித்யாபீடத்தின் ( மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் )மற்றும் முன்னாள் வேந்தரும் ஆவார்.[1] இவர் சமசுகிருத இலக்கியத்தில் தனது புலமைக்காக அறியப்பட்டவர். 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசால் நான்காவது உயரிய இந்திய குடிமக்கள் விருதான பத்மசிறீ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[2]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ராமரஞ்சன் முகர்ஜி 1928 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் பிறந்தார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1944 இல் இளங்கலைப் பட்டமும், 1946 இல் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1953 இல் அதே பல்கலைக்கழகத்தில் (கல்கத்தா பல்கலைக்கழகம்) முனைவர் பட்டம் பெற்றார். மேலும், 1964 இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இலக்கிய முனைவர் பட்டத்தையும் பெற்றார் .

முகர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 1956 இல் சாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்குள்ள சமசுகிருதத் துறையில் சேர்ந்தார். அங்கு இவர் இறுதியில் துறையின் தலைவரானார். அங்கு தான் பணியாற்றிய காலத்தில், பல்கலைக்கழகத்தில் சிறப்பு உதவித் துறையை (DSA சமஸ்கிருதம்) நிறுவுவதில் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.[3] 1970 இல், இவர் பர்த்வான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு 1984 வரை அப்பதவியில் இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் இரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தராகப் பணியாற்றி, 1987 இல் அங்கிருந்து ஓய்வு பெற்றார். இந்தக் காலகட்டத்தில், இவர் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும், பின்னர் அதன் தலைவராகவும் இருந்தார், மேலும் காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் இராஷ்ட்ரிய சமசுகிருத வித்யாபீடத்தின் முன்னாள் வேந்தராகவும் இருந்தார்.[1] [4] சிறீ சீதாராம் வைதிக் ஆதர்ச சமசுகிருத மகாவித்யாலயா,[5] ராஷ்ட்ரிய சமசுகிருத சன்ஸ்தான் இணைக்கப்பட்ட ஓரியண்டல் படிப்புகளுக்கான கல்லூரி, பிர்பூம் பொறியியல் மற்றும் மேலாண்மை நிறுவனம்,[6] கொல்கத்தா பொறியியல் மேலாண்மை நிறுவனம், கொல்கத்தா[7] மற்றும் கொல்கத்தாவில் ஒரு சட்டக் கல்லூரி ஒன்று நிறுவியதற்குப் பின்னால் இவரது பங்களிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஸ்ரீ ஸ்ரீ சீதாராமதாசு ஓம்கார்நாத் சம்சுகிருத சிக்ஷா சம்சத் [8]என்ற கலாச்சார அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார், மேலும் கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் புரவலராகவும் இருந்தார். [4] அவர் இந்திய தூதுக்குழுவின் உறுப்பினராக பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். முகர்ஜி பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில:

  • கவிதையில் படிமம்: ஒரு இந்திய அணுகுமுறை [9]
  • இந்தியவியல் ஆய்வுகளின் தொகுப்பு[10]
  • உலகளாவிய அழகியல் மற்றும் சமஸ்கிருத கவிதை [11]
  • ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் [12]
  • ராஜநாக மஹிம்பட்டாவின் வ்யக்திவிவேகா [13]

ராமரஞ்சன் முகர்சி 2010 மார்ச் 13 அன்று முதுமைக் கால நோய்களால் காலமானார். முகர்ஜியின் நினைவாக 'ஹே மஹாஜீவனா' மற்றும் 'கவிதா சங்கிரஹா' போன்ற பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

[தொகு]

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் கௌரவ ஆய்வாளரான இராமரஞ்சன் முகர்ஜி, இந்திய அரசிடமிருந்து ஹிரோஷிமா அமைதி விருதையும் கௌரவச் சான்றிதழையும் பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச அரசு இவருக்கு விசுவ பாரதி விருதையும், இந்திய அரசு பத்மஸ்ரீ என்ற குடிமை விருதையும் வழங்கின. ஆனால் விருது வழங்கும் விழாவுக்கு முன்பே இவர் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "RSV". RSV. 2014. Retrieved 20 December 2014.
  2. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 11 November 2014.
  3. "Exotic India Art". Exotic India Art. 2014. Retrieved 20 December 2014.
  4. 1 2 "IERD". IERD. 2014. Archived from the original on 15 October 2014. Retrieved 20 December 2014.
  5. "SSVAM". Omkar Nath Mission. 2014. Archived from the original on 20 December 2014. Retrieved 20 December 2014.
  6. "BIET". BIET. 2014. Archived from the original on 7 December 2021. Retrieved 20 December 2014.
  7. "CIEMCAL". CIEMCAL. 2014. Archived from the original on 30 June 2007. Retrieved 20 December 2014.
  8. "SSOSSS". SSOSSS. 2014. Retrieved 20 December 2014.
  9. Ramaranjan Mukherji (1972). Imagery in poetry: an Indian approach. Sanskrit Pustak Bhandar. p. 168.
  10. Ramaranjan Mukherji, Anantalal Thakur (1992). Corpus of Indological Studies. Sharada Publishing House. p. 287. ISBN 9788185616070.
  11. Ramaranjan Mukherji (1998). Global Aesthetics and Sanskrit Poetics. Rashtriya Sanskrit Sansthan. p. 265.
  12. Ramaranjan Mukherji (2012). Rashtriya Sanskrit Sansthan. Sharada Publishing. p. 190. ISBN 978-8185616223.
  13. Ramaranjan Mukherji (Translator, Editor) (2005). Vyaktiviveka of Rajanaka Mahimbhatta. Sanskrit Pustak Bhandar. ASIN B008RY2QQM. {{cite book}}: |author= has generic name (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமரஞ்சன்_முகர்ஜி&oldid=4523669" இலிருந்து மீள்விக்கப்பட்டது