இராமபாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறிய தட்டையான உடலுடைய,இறக்கையற்ற,லெப்பிஸ்மா என்ற இனத்தைச் சேர்ந்த பூச்சிக்கு இராமபாணம் என்று பெயர்.[1] உடல் வெண்மையான, வெள்ளி போன்ற பளபளக்கும் செதில்களால் மூடப்பட்டிருப்பதாலும்,விரைவாக இடம் பெயர்ந்து செல்வதாலும் ,இது வெள்ளிமீன் என்று அழைக்கப்படுகிறது.இப்பூச்சிகள் சுவடிகளையும், நூல்களையும் தின்று துளைத்து விடுகின்றன. இதனால் இவற்றை எழுத்தாணி பூச்சி என்றும் குறிப்பிடுவர்.இவை இரவில் இயங்கும் இயல்புடையவை, மேலும் இருண்ட குளிர்ச்சியான இடங்களில் காணப்படுகின்றன. ஏறத்தாழ 1 செ.மீ. உடல் நீளமுடையவை. இவற்றின் உணர் கொம்புகளும், வால் நீட்சிகளும் உடலை விட அளவில் குறைந்தவை. ஆண், பெண் பூச்சிகள் அளவில் ஒத்தவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்சியம்-தொகுதி 4- தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமபாணம்&oldid=2723747" இருந்து மீள்விக்கப்பட்டது