இராமனாதிச்சன்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமனாதிச்சன்புதூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராமனாதிச்சன்புதூர் (ஆங்கிலம்:Ramanathichanputhur). தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தின் மருங்கூர் பேரூராட்சியில் உள்ள கிராமம். தென் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லையாக இருந்துள்ளது.

அமைவு[தொகு]

இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது, மேற்குப் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருங்கூர் அமைந்துள்ளது. சுசீந்திரத்திலிருந்து நான்கு கி. மீ. தூரத்தில் இக்கிராமம் உள்ளது. ஊரின் நடுவே செல்லும் சாலை ஊரை இரண்டாக பிரிக்கின்றது. வடக்குப் பகுதி வடக்கூர் எனவும் தெற்குப்பகுதி தெக்கூர் எனவும் அழைக்கப்படுகின்றது.

மக்கள்[தொகு]

இந்த ஊரில் உள்ள மக்களில் பெரும்பாலோனர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். வடக்கூரில் வெள்ளாள கிறிஸ்தவர்களும், தெக்கூரில் நாடார் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். வெள்ளாள இனமக்கள் இதே ஊரை பரம்பரையாக கொண்டவர்கள் மற்றும் அருகிலுள்ள மருங்கூர், இரவிபுதூர் போன்ற ஊர்களில் வசிக்கும் இந்து வெள்ளாளர்களின் உறவினர்கள். கிறிஸ்தவர்கள் ஆன பின்னர் திருமண உறவின் மூலம் வடக்கன்குளம் மற்றும் குருவிநத்தம் (கோவில்பட்டி) கிறிஸ்தவ வெள்ளாளர்களின் உறவினரானார்கள். நாடார் இன மக்கள் நாகர்கோவிலின் மேற்குப் பகுதி ஊர்களிலிருந்து தொழில் காரணமாக இராமனாதிச்சன்புதூரில் குடியேறியவர்கள்.

சமயத் திருவிழா[தொகு]

வடக்கு இராமனாதிச்சன்புதூரின் புனித லயொலா இஞ்ஞாசியாரின் திருவிழா ஆண்டுதோறும் ஜீலை மாதம் 22ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி 31ம் நாள் புனித இஞ்ஞாசியாரின் நாளன்று 10 ஆம் திருவிழாவாக கொண்டாடப்பட்டு நிறைவு பெறும். தெற்கு இராமனாதிச்சன்புதூரின் பாதுகாவலரான புனித ஆரோக்கியநாதரின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்த கத்தோலிக்க ஆலயங்களில் இராமனாதிச்சன்புதூரின் பழைய கோயிலும் ஒன்று. 1700களில் கட்டப்பட்ட வடக்கு இராமனாதிச்சன்புதூரின் பழைய கோயில் பழுது பார்க்கப்பட்டு தற்போது குழந்தை இயேசு ஆலயமாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக ராஜாவூர், ராமபுரம் போன்ற ஊர்கள் இராமனாதிச்சன்புதூரின் கிளைப்பங்குகளாகவே இருந்தன. சமீப காலம் வரை மயிலாடி இராமனாதிச்சன்புதூரின் கிளைப்பங்காக இருந்தது. தற்போது தெற்கு இராமனாதிச்சன்புதூர், மருங்கூர், அமராவதிவிளை ஆகிய மூன்று கிளைப்பங்குகளை உள்ளடக்கி வடக்கு இராமனாதிச்சன்புதூர் புனித இஞ்ஞாசியார் ஆலயம் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமனாதிச்சன்புதூர்&oldid=1941133" இருந்து மீள்விக்கப்பட்டது