இராமநாதேசுரர் ஆலயம்-கண்டாச்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டாச்சிபுரம் இராமநாத ஈஸ்வரர் ஆலயம்[தொகு]

தல வரலாறு[தொகு]

கண்டராதித்தன்கண்டராதித்தன் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் இராமபிரான் சீதையைத் தேடி வரும்போது,சிவபூனச் செய்தல் பொருட்டு மணலினால் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டதாகச் செவி வழிச் செய்தி கூறப்படுகிறது.இராமபிரான் வழிப்பட்டதால் இவ்வூர் இறைவனுக்கு"இராமநாதேசுரர்" என்று பெயர் வழங்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

தமிழகத்தின் நடுநாயகமாக திகழ்வது நடுநாடு.அந்நாட்டில் வற்றாத வளங்கொழிக்கும்தென்பெண்ணை ஆற்றின் வளத்தால் பூத்துக் குலுங்கும் பொலிவுடையது கோவல் வீரட்டம்.அந்நகரின் வடபால் கண்டராதித்த சோழன் காலத்தே நிறுவப்பட்ட இராமநாத ஈசுவரராலயமாம்,கற்கோவில் இவூர் மடவிளாகம் ஏரிக்கரையின் கீழ்ப்பகுதியிலமைந்துள்ள்து.இக்கோயில் கல்வெட்டுகளில்"நெற்குப்பையான் கண்டராதித்தபுரம்"என காணப்படுகிறது.கண்டராதித்தன் பெயரால் இவ்வூர் கண்டராதித்தபுரம் என்றாயிற்று.இவ்வூர் குறிஞ்சி நில வளமும் மருத நில வளமும் நிறைந்து செழித்திச் சிறக்கின்றது.

சிறப்புகள்[தொகு]

இகோயில் நாளும் இன்னிசையால்சைவமும்,தமிழும்பரப்பும் ஞானக் கோயிலாகும்.இச்சிவாலய்த்தில் அருள்பாலிக்கும் அம்பாள் சௌந்தர்ய ஞானாம்பிகை,செல்வ விநாயகர்,அறுபத்து மூவர்,சோமஸ்கந்தர்,இராமன் சீதை லட்சுமணன் ஆஞ்சநேயர்,கஜலட்சுமி,நடராஜர் போன்ற ருத்தரங்களும் உள்ளன.கோவிலின் உள்ளே கருவறைச் சுவரில் கல்வெட்டுகளும்,இராமர் சிவனை வழிப்பட்டதற்கு சான்றாக கருவறைக்கு செல்லும் வாயிலின் தென்பால் இராமர் சீதை அனுமன் சிவபூஜை செய்யும் சிற்பங்கள் சுவரில் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

சமயக் குரவர் குருபூசை,ஐப்பசியில் கந்தர் சஷ்டி ,தை மாதத்தில் பிரமோற்சவம் பத்து நாட்கள் ,சோம வார வழிபாடு,விசாக வழிபாடு,மார்கழித் திங்கள் வழிபாடு,பிரதோஷ வழிபாடு,தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெறும்.

மேற்கோள்கள்திருத்தல வரலாறும்,பஞ்சபுராணத் தொகுப்பும்[தொகு]