உள்ளடக்கத்துக்குச் செல்

இராமதாசு காதியாபாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமதாசு காதியாபாபா
பிருந்தாவனத்தில் இராமதாசு காதியாபாபா
பின்னவர்சாந்ததாசு காதியாபாபா
பதவிகாதியா பாபா மகாராசா
சுய தரவுகள்
பிறப்பு(1800-07-24)24 சூலை 1800
பஞ்சாப் மாநிலம், இந்தியா
இறப்பு8 பெப்ரவரி 1909(1909-02-08) (அகவை 108)
சமயம்இந்து மதம்
தத்துவம்நிம்பார்க்க சம்பிரதாயம்
பதவிகள்
ஆசிரியர்தேவதாஸ்ஜி மகாராசா

இராமதாசு காதியாபாபா (Ramdas Kathiababa) (1800 ஆம் ஆண்டு சூலை 24 – 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 8) இந்து ஆன்மிகத் தலைவரும், துவைதாத்வைத நிம்பார்க்க சம்பிரதாயத்தின் ஐம்பத்துநான்காவது ஆச்சாரியரும் ஆவார். [1][2][3] ஸ்ரீ ஸ்ரீ 108 சுவாமி இராமதாசு காதியாபாபாஜி மகாராசு என்ற பெயராலும், பொதுவாக காதியாபாபா என்ற பெயராலும் அறியப்பட்டார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலத்தின் லோனாசமாரி என்ற கிராமத்தில் பிறந்தார்.[4][5][6][7]

சமயப் பயிற்சி

[தொகு]

நான்கு வயதில், இவரது கிராமத்திற்கு வந்த ஒரு பரமகம்சர் அவரிடம் எப்போதும் இராம நாமத்தை ஜபிக்குமாறு அறிவுரை கூறினார். அதன் பின்னர் இவர் தொடர்ந்து இராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினார். ஐந்து அல்லது ஆறு வயதில், எருமைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒளிமிக்க புனிதத் தோற்றமுடைய ஒருவரைக் கண்டார். அந்தத் துறவி இவரிடம் உணவு கேட்டபோது, காதியாபாபாஜி மகாராசு தனது வீட்டிலிருந்து அதிகளவில் மாவு, சர்க்கரை, நெய் போன்றவற்றை எடுத்துவந்து வழங்கினார். இவரது பக்தியால் மகிழ்ந்த அந்தத் துறவி, நீ யோகிகளின் அரசனாக விளங்குவாய். என்று அருளாசி வழங்கினார். அதன் பின்னர் அந்தத் துறவி மறைந்துவிட்டார். அந்த நிகழ்வுக்குப் பிறகு, உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மைவிட்டு நீங்கிவிட்டதாக காதியாபாபாஜி மகாராசு உணர்ந்தார். உபநயனச் சடங்கு நடைபெற்ற பிறகு, மற்றொரு கிராமத்தில் குருவிடம் இலக்கணம், சோதிடம், சாத்திரங்கள், நினைவியல், விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை உள்ளிட்ட பல நூல்களைப் பயின்றார். அவற்றில் பாகவதமே இவருக்கு மிகவும் விருப்பமான நூலாக இருந்தது. குருகுலக் கல்வியை முடித்து ஊர் திரும்பிய இவர், கிராமத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து காயத்திரி மந்திரத்தை சித்தி பெறும் நோக்கில் ஜபித்தார். இறுதியில் காயத்திரி சித்தியை அடைந்தார். அப்போது காயத்திரி தேவி இவருக்குக் காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. காயத்திரி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தபோது, கடைசி இருபத்தைந்தாயிரம் முறை ஜபத்தை வேள்வி நெருப்பின் முன்னிலையில் நிறைவு செய்யுமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டது.[8][9][10]

காதியாபாபா

[தொகு]

காதியாபாபா என்பது, அதன் நிறுவுநரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு சமகால ஆன்மிக மரபாகும். இந்த மரபினர் நிம்பார்க்கரின் துவைதாத்வைத வைணவ வேதாந்தத் தத்துவத்தை பின்பற்றுகின்றனர்.[11]


குறிப்புகள்

[தொகு]
  • SRI AMALENDU ROY. Tapobalar Chokhe Shri Shri Ramdas Kathiya Baba (Bengali) (in Bengali) (1998 ed.). India: Swami Santadas And Amadeus Roy. p. 100. ISBN 9789383883134.
  • Santadas Kathiababa. Sri 108 Swami Ramdas Kathiya Baba Ji Jibon Charitra (Bengali) (in Bengali) (2012 ed.). West Bengal, India: Swami Santadas Institute Of Culture, Kolkata. p. 118. ISBN 8186710256.
  • Dr. Kowal Krishan Pasi. Shri 108 Shri Ram Das Kathiya Baba Ji Maharaj Da Jivan Charittar (Punjabi) (in பஞ்சாபி). Sri Brindaban Bihari Das, Kolkata. p. 88.
  • Santadas Kathiababa. Kabitayein Shri Ramdas Kathia Baba (Bengali) (in Bengali) (2010 ed.). Vrindavan: Kathia Babaji Ashram.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Prof. Roma Bose, Vedanta Parijata Saurabha of Nimbarka and Vedanta Kaustubha of Srinivasa (Commentaries on the Brahma-Sutras) - Doctrines of Nimbarka and his followers
  2. ↑ Siddhayogi Ramdas Kathiababa Kon Kon Aloukik Shaktir Adhikari Chhilen, Saptahik Bartaman Patrika(Bengali) 23 July 2011.
  3. ↑ A Short Biography of His Holiness Shree 108 Swamy Ramdas Kathia Baba
  4. ↑ "Lineage". Kathia Baba Charitable Trust (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-21. Retrieved 2023-11-25.
  5. ↑ "Stories about Ramdas Kathiya Baba | Avatars and yogis" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-06. Retrieved 2023-11-25.
  6. ↑ Sobiesk, Ed (2015-09-29). "Session details: RIIT Paper 3". Proceedings of the 4th Annual ACM Conference on Research in Information Technology. New York, NY, USA: ACM. doi:10.1145/3247528. ISBN 978-1-4503-3836-3. S2CID 235127642.
  7. ↑ "Waging war against lethargy". The New Indian Express. 16 May 2012. Retrieved 2023-11-25.
  8. ↑ দানিয়াড়ী, অতীন্দ্র (2020-08-10). "আগুনের মাঝে ধ্যানে মগ্ন যোগী". Eisamay Gold (in Bengali). Retrieved 2023-11-25.
  9. ↑ "Ramdas Kathia Baba - Part 1 | PDF | Guru | Prayer". Scribd (in ஆங்கிலம்). Retrieved 2023-11-25.
  10. ↑ Santaldas (1998). "A" Short Biography of His Holiness Shree 108 Swamy Ramdas Kathia Baba (in ஆங்கிலம்). Sri Amalendu Roy.
  11. ↑ Bandyopadhyay, Susilkumar; Banerjee, Subodh Kumar (1971). Sri Sri Bamakshepa – Google Book Search. Retrieved 2008-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமதாசு_காதியாபாபா&oldid=4616805" இலிருந்து மீள்விக்கப்பட்டது