உள்ளடக்கத்துக்குச் செல்

இராமச்சந்திர சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமச்சந்திர சுக்லா
பிறப்பு(1884-10-04)4 அக்டோபர் 1884
பஸ்தி, வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா
இறப்பு2 பெப்ரவரி 1941(1941-02-02) (அகவை 56)
வாரணாசி, காசி இராச்சியம், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், கட்டுரையாளர், அறிஞர், வரலாற்றாளர், புதின நூலாசிரியர், விமர்சகர்
அறியப்படுவதுஇந்தி மொழி இலக்கிய வரலாற்றின் குறியீட்டாளர்

இராமச்சந்திர சுக்லா (RamChandra Shukla) (4 அக்டோபர் 1884 – 2 பிப்ரவரி 1941),[1] ஆச்சார்யா சுக்லா என்றும் அழைக்கப்படும் இவர் இந்தி மொழி இலக்கிய வரலாற்றின் குறியீட்டாளர் ஆவார்.

இவர் அறிவியல் அமைப்பில் பரந்த அனுபவ ஆராய்ச்சியைப் பயன்படுத்தி ஆதாரங்களுடன் இந்தி இலக்கிய வரலாற்றினை எழுதியுள்ளார்.[2] இந்தி மொழி எழுத்தாளரான இவர் இந்தி இலக்கிய வரலாறு (நூல்) எழுதியமைக்கு (1928-29) மிகவும் பிரபலமானவர். இராமச்சந்திர சுக்லா 4 அக்டோபர் 4 1884 அன்று தற்கால உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சந்திரபாலி சுக்லா வருவாய் ஆய்வாளராக (கனூங்கோ) இருந்தார். இராமச்சந்திர சுக்லா இலண்டன் மிஷன் பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளியைப் படிப்பை முடிப்பதற்கு முன்பு, அவர் தனது வீட்டில் இந்தி மொழி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகியவற்றைக் கற்றார். பின்னர் மேலதிக படிப்புக்காக அவர் பிரயாக்ராஜ், பிரயாக்ராஜ் சென்று தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். அதன்பிறகு அவர் தனது மதிப்புமிக்க இலக்கியப் படைப்புகளையும் அவரது அனுபவ தகவல்களையும் எழுதி வெளியிட்டார்.

இராமச்சந்திர சுக்லா 1937 முதல் 1941-இல் இறக்கும் வரை வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் இந்தி மொழித் துறைப் பேராரசிரியாக பணியாற்றினார்.

படைப்புகள்

[தொகு]

ஆச்சார்யா இராமச்சந்திர சுக்லாவின் படைப்புகள்:

 • இந்தி இலக்கிய வரலாறு
 • Nirala Aur Nazrul Ka Rashtriya Chintan
 • Nirvachit Prabandh Sankalan
 • Sadi Ke Ant Mein Hindi
 • Naya Mandand (இந்தி ஆய்விதழ்)

மேற்கோள்கள்

[தொகு]
 1. Pustak Mahal -Editorial Group (1 January 1997). Over 300 Great Lives. Pustak Mahal. pp. 248–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-0273-8.
 2. George K. M. George, Dr Karimpumannil Mathai (K.M.) (1997). Masterpieces of Indian literature, Volume 1. New Delhi: National Book Trust. p. 2184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123719788.

மேலும் படிக்க

[தொகு]
 • Alochak Ram Chandra Shukla by Ganga Prasad Pandey
 • Acharya Ram Chandra Shukla aur Hindi Alochana by Dr. Ram Vilas Sharma
 • Lokjagran Aur Acharya Shukla by Dr. Ram Vilas Sharma
 • Acharya Ram Chandra Shukla by Professor Joseph Mundasshweri
 • Bharatiya Sahitya Samiksha aur Acharya Shukla
 • "Acharya Ramchandra Shukla ka Anuvad Karm" by Dr. Anand Kumar Shukla
 • "Acharya Ramchandra Shukla Ki Itihas Drishti", Prof. M. P. Sharma

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமச்சந்திர_சுக்லா&oldid=3333256" இலிருந்து மீள்விக்கப்பட்டது