இராமச்சந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமசந்திரம் (Ramasandiram, ರಾಮಚನ್ತಿರಮ್ రామచన్తిరమ్) கிருட்டிணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆகும். நாடுவனப்பள்ளி ஊராட்சியில் இது பெரிய கிராமமாகவும் உள்ளது. தமிழ் மொழி பேசுவோர் பெரும்பான்மையாகவும், தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். இக்கிராமம் கர்நாடக மாநிலத்திற்கு அருகிலும், ஆந்திர மாநிலத்திற்கு மிக அருகிலும் உள்ளது.

மக்கள்[தொகு]

இக்கிராமத்தில் நானுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பஞ்சாயத்து முறையில் குற்றங்களை விசாரிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. அனைவரும் விவசாயத்தை முதன்மை தொழிலாகவும் கூலித்தொழில் மற்றும் சிறுதொழில் முனைவோராகவும் இருக்கின்றனர். சாதாரண வேலைக்கு செல்பவர்களாக இக்கிராமத்து இளைஞர்கள் இருக்கின்றனர். வீட்டுப் பெண்கள் பசுக்களை பராமரிப்பதும் வீட்டு வேலைகளை செய்வதும் முக்கிய வேலையாக கொண்டுள்ளனர். சில வீடுகளில் பெண்கள் குடும்ப தலைவியாகவும் கணவர் பணியில் இருப்பவராகவும் இருக்கின்றனர். பெரும்பாலான ஆண்கள் இராணுவ வீரர்களாகப் பணியாற்றுகின்றனர். போக்குவரத்து வசதி கிராமத்தில் இருந்து 1 கி.மி தொலைவிலும் மருத்துவமனை 3 கிமீ தூரத்திலும் உள்ளது. அருகில் உள்ள சிறு நகரமான வேப்பனப்பள்ளியில் பொருட்கள் வாங்கவும் விற்கவும் மக்கள் அன்றாடம் சென்று வருகின்றனர். கிராமத்தில் நியாய விலை கடையும் இயங்கி வருகிறது.

பள்ளிக் கூடங்கள்[தொகு]

கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கி கொண்டு வருகிறது. முன்னுற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி குழந்தைகள் காப்பகமும் இயங்கி வருகிறது.

கோவில்கள்[தொகு]

விநாயகர் கோவிலும், திரகுபதி அம்மன் கோவிலும், மாரியம்மன் மற்றும் எல்லம்மாள் கோவிலும் ஊரின் எல்லைகளில் எல்லை கடவுள்களும் உள்ளன.

ஏரிகள்[தொகு]

கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஏரியும் இருக்கிறது. ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீரை எடுத்து பயன்படுத்திக் கொள்கின்றனர். எட்டு ஏக்கர் பரப்பில் ஏரி இயற்கை எழில் மிகுந்து காணப்படுகிறது.

விவசாயம்[தொகு]

நெல் முக்கிய பயிராகவும் கம்பு சோளம் கேழ்வரகு தோட்ட வகைகள் வாழை தென்னை மஞ்சள் கரும்பு போன்ற வகைகளும் பட்டுபூச்சி வளர்ப்பு தொழில் அதிகமாக உள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய பதிவேட்டில்[தொகு]

* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,தடதாரை 635121 http://www.elections.tn.gov.in/pdf/ac54.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமச்சந்திரம்&oldid=2456279" இருந்து மீள்விக்கப்பட்டது