இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம்

நிறுவல்:1930
வகை:தனியார்
செயலர்:சுவாமி அபிராமானந்தர்
அமைவிடம்:கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
வளாகம்:புறநகர்ப்பகுதி, 300 ஏக்கர்கள் (1.2 km2)
சார்பு:இராமகிருஷ்ணா மிஷன்
இணையத்தளம்:www.srkv.org

இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர் என்பது பாலர் பள்ளி முதல் ஆய்வுப் படிப்பு வரை மொத்தம் 19 கல்வி நிறுவனங்கள் கொண்ட குழுமம். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரின் புறநகர்ப் பகுதியில் வித்தியாலயம் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1934 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மிசனின் கீழிணைக்கப்பட்டது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோரின் கல்வி மற்றும் ஆன்மீக கருத்துக்களை மாணவர்களின் தினசரி வாழ்வில் வேரூன்றச் செய்யும் நோக்கினைக் கொண்டது வித்யாலயம். இங்கு சுயக்கட்டுப்பாடு, தன்னிறைவு, தேச பக்தி, கடமையுணர்வு போன்ற கருத்துக்கள் வாழ்வியலோடு இணைந்து நடைமுறைக் கல்வியாக அளிக்கப்படுகிறது. இந்நிறுவனம் இராமகிருஷ்ணா மடத்தினைச் சேர்ந்த சுவாமிகளின் மேற்பார்வையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.[1]

வரலாறு[தொகு]

இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், 1930 ஆம் ஆண்டு தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரால் 5.75 ரூபாய் முதலீட்டுடன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு மாணவனோடு தொடங்கப்பட்டது. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி சிவானந்தாவுடனான சந்திப்புதான் தான் கல்விப்பணியில் ஈடுபடக் காரணமென அவினாசிலிங்கம் கூறியுள்ளார். 1934 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியால் வித்யாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே ஆண்டு வித்யாலயம் இராமகிருஷ்ண மிசனின் கீழிணைக்கப்பட்டது.[2]

வளாகம்[தொகு]

இந்நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து சுமார் 19 கிமீ தொலைவில் அதன் புறநகர்ப் பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையோரமாக அமைந்துள்ளது. இவ்வளாகம் கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலப்பரப்புடையது.

நிறுவனங்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

 • வித்யாலயா உயர்நிலைப் பள்ளி
 • சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
 • சுவாமி சிவானந்தா ஆங்கிலவழிப் பள்ளி
 • T A T கலாநிலையம் நடுநிலைப் பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 • ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா மாருதி கல்லூரி (விளையாட்டு)
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி

சிறப்பு நிறுவனங்கள்[தொகு]

 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா தொழில்நுட்பப் பயிலகம்
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா காந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா தொழில் பயிற்சி நிலையம்
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா வேளாண்மை நிறுவனம்
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் வித்யாலயா ஐடி அகாதமி

அமைவுகள்[தொகு]

[1]

 • விளையாட்டு வெளிகள்
 • உடற்பயிற்சி நிலையம்
 • விருந்தினர் விடுதி
 • உள்விளையாட்டரங்கம்
 • கலையரங்கம்
 • புத்தகக் கடை
 • உணவகம்
 • விவேகானந்தர் பூங்கா
 • இராமாயணக் கருத்துப் பூங்கா
 • ஸ்ரீ இராமகிருஷ்ணர் கோயில்
 • தியானம் மற்றும் பிரார்த்தனைக்கூடம்
 • அச்சுக்கூடம்
 • அஞ்சல் நிலையம்
 • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
 • வேளாண் நிலங்கள்

சமுதாயப் பணி[தொகு]

2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுவாமி அகானந்தா கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (The Swami Akhandananda Rural Development Scheme) அறிவொளி நகர் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவம், தனிவகுப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[1]

குறிப்பிடத்தக்க நிகச்சிகள்[தொகு]

குருபூஜை[தொகு]

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பிறந்த நாள் குருபூஜை என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத முதல் ஞாயிறன்று இவ்விழா நடைபெறுகிறது. ஒரு நாள் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழாவில் பஜனைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், நாடகங்கள், கல்விக் கண்காட்சி, இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாகும்.[1]

இளைஞர் மாநாடு[தொகு]

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும் வண்ணம் இளைஞர் மாநாடு 2009 ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத முதல் வாரத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், காட்சியளிப்புகள், தியானம், யோகா, விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இதன் முக்கிய நிகவுகளாகும்.[3]

விளையாட்டுத் திருவிழா[தொகு]

விளையாட்டு விழா ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் நடத்தப்படுகிறது. இதில் கடவுள் மற்றும் தேசபக்திப் பாடல்களின் தாளப் பின்னணியில் 45 தொடக்கப்பள்ளிகளிலிருந்து கிட்டத்தட்ட 4000 மாணவ, மாணவியர் பங்குபெறும் யோகா, உடல் வலிமை மற்றும் அழகிற்கான உடற்பயிற்கள் (calisthenic exercises) நடைபெறும்.[4]

கலைமகள் விழா[தொகு]

கலை, இலக்கியம், இசை, நாடகத்திற்காக கலைமகள் விழா மூன்றுநாள் நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் விஜய தசமிக்கு முன்பாக நடத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "Vidyalaya Profile". பார்த்த நாள் 2010-10-02.
 2. "About Vidyalaya". பார்த்த நாள் 2010-10-02.
 3. "Youth Convention Videos". பார்த்த நாள் 2010-10-02.
 4. 4.0 4.1 "Vidyalaya Newsletter". பார்த்த நாள் 2010-10-02.

வெளி இணைப்புகள்[தொகு]