இராமகிருட்டிண பிசுவாசு
இராமகிருட்டிண பிசுவாசு | |
---|---|
இராமகிருட்டிண பிசுவாசு | |
பிறப்பு | சரோதாலி, சிட்டகொங், பிரித்தானிய இந்தியா | சனவரி 16, 1910
இறப்பு | ஆகத்து 4, 1931 ஆலிப்பூரா சிறை, பிரித்தானிய இந்தியா | (அகவை 21)
இறப்பிற்கான காரணம் | தூக்கிலடப்பட்டார். |
பணி | புரட்சிகர நடவடிக்கை |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
Criminal penalty | சாகும்வரை தூக்கு |
இராமகிருட்டிண பிசுவாசு (Ramakrishna Biswas ;16 சனவரி 1910 - 4 ஆகத்து 1931) ஓர் வங்காளப் புரட்சியாளரும், தியாகியும் ஆவார். இவர் சூர்யா சென்னின் புரட்சிக் குழுவின் தீவிர உறுப்பினராக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பிசுவாசு பிரித்தானிய இந்தியாவில் சிட்டகொங்கின் சரோதாலியில் துர்கா கிருபா பிசுவாசு என்பவருக்கு பிறந்தார். 1928ஆம் ஆண்டில், மாவட்டத்தின் நுழைவுத் தேர்வில் இவர் முதலிடம் பிடித்தார். பின்னர் சூர்யா சென் தலைமையில் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டில், குண்டுகளைத் தயாரிக்கும் போது இவர் பலத்த காயமடைந்தார்.[1]
புரட்சிகர நடவடிக்கையும் இறப்பும்
[தொகு]சூர்யா சென்னும் அவரைப் பின்பற்றுபவர்களும் சிட்டகொங்கின் காவல் ஆய்வாளர் திரு. கிரேக்கை கொல்ல முடிவு செய்தனர். பிசுவாசும் காளிபடா சக்கரபாணியும் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டனர். 1 திசம்பர் 1930 அன்று, இவர்கள் சந்த்பூர் தொடர் வண்டி நிலையத்துக்குச் சென்றனர். ஆனால் கிரேக்கிற்குப் பதிலாக தாரிணி முகர்ஜி என்ற ஒரு இரயில்வே காவல் ஆய்வாளரை தவறாகக் கொன்றனர். இவர்கள் இருவரும் 2 திசம்பர் 1930 அன்று கைது செய்யப்பட்டனர்.[2] பிசுவாசின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சிட்டகொங்கிற்குச் செல்லவும், கொல்கத்தாவின் ஆலிபூர் சிறையில் இவரைப் பார்க்கவும் போதுமான நிதி இல்லை. அந்த நேரத்தில், மற்றொரு புரட்சிகர தேசியவாதி பிரிதிலதா வதேதர் கொல்கத்தாவில் தங்கியிருந்தார். பிசுவாசை சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். சிறைக்குள் பிசுவாசின் சகோதரியாக நடித்து உள்ளே சென்று அவரை சந்தித்தார். பிசுவாசின் தியாகம் பிரிதிலதாவை ஊக்கப்படுத்தியது.[3][4]
விசாரணைக்குப் பிறகு பிசுவாசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 4 ஆகத்து 1931 காலை, இவர் ஆலிப்பூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.[5] இவரது கூட்டாளி, காளிபடா சக்கரபாணி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சிற்றறைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Vol - I, Subodh C. Sengupta & Anjali Basu (2002). Sansab Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0.
- ↑ 2.0 2.1 Chatterjee, Reva (2000). Netaji Subhas Bose: Bengal Revolution and Independence (in ஆங்கிலம்). Ocean Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87100-27-0.
- ↑ Guha, Arun Chandra. Indias Struggle Quarter of Century 1921to1946 Part I (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2274-1.
- ↑ Upashana Salam. "Pritilata Waddedar: Politics of remembrance". பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.
- ↑ "RAMKRISHNA BISWAS.". The Straits Times: p. 5. 14 August 1931. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19310814-1.2.9.