இராபின் கானூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராபின் எம். கானூப் (Robin M. Canup) (பிறப்பு: நவன்பர் 20, 1968) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இளமறிவியல் பட்டத்தை டியூக் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தை பவுள்டரில் அமைந்த கொலராடோ பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவரது முதன்மையான ஆராய்ச்சிப் பகுதி கோளகள், நிலாக்களின் தோற்றங்கள் பற்றியதாகும்.[1] இவருக்கு 2003இல் ஆரோல்டு சி. யூரே பரிசு வழங்கப்பட்டது.[2]

இவர் தன் ஆய்வுக்கு பெருங்கணத்தாக்கல் அல்லது பெருமொத்தல் கருதுகோளைப் பயன்படுத்தி, படிம ஓர்வு, ஒப்புருவாக்கம் ஆகிய முறைகளால் உண்மையில் கோள் மொத்தல்கள் உருவாதலினை விளக்குகிறார்.[3][4][5][6] இவர் புவியும் அதன் நிலாவும் ஏற்கெனவே நிலவிய இருகோள்கள் மொத்தும்போது உருவாகின என வாதிடுகிறார். மேலும் இவை இரண்டும் செவ்வாயைவிட பெரியனவாக இருந்தன என்கிறார். மொத்தலுக்குப் பின் புவி சுற்றியமைந்த பொருள்திரளின் வட்டு நிலாவாகியது என்கிறார்.[7] இவர் புவி, நிலா தோற்றம் பற்றிய நூலொன்றை எழுதியுள்ளார்.[8] கானுப் பெருமொத்தல் கருதுகோளைப் பயன்படுத்தி புளூட்டோவும் அதன் நிலாவான சாரனும் உருவாகியதையும் விளக்கிக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.[9]

இவர் பாலே நடனத்தில் வல்லவர். தனது ஆய்வுரையை முடித்த்தும் ஒருவாரத்துக்கு பவுள்ட்ரில் பாலே நடனம் ஆடியுள்ளார்.[10]

நூல்தொகை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. University of Boulder Profile, boulder.swri.edu; accessed March 9, 2015.
  2. "Harold C. Urey Prize in Planetary Science".
  3. Canup, Robin M.; Asphaug, Erik (2001-08-16). "Origin of the Moon in a giant impact near the end of the Earth's formation". Nature 412 (6848): 708–712. doi:10.1038/35089010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:11507633. http://www.nature.com/nature/journal/v412/n6848/abs/412708a0.html. பார்த்த நாள்: 2015-10-13. 
  4. Agnor, Craig B.; Canup, Robin M.; Levison, Harold F. (1999). "On the Character and Consequences of Large Impacts in the Late Stage of Terrestrial Planet Formation". Icarus 142 (1): 219–237. doi:10.1006/icar.1999.6201. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 1999Icar..142..219A. http://www.sciencedirect.com/science/article/pii/S0019103599962012. பார்த்த நாள்: 2015-10-13. 
  5. Canup, Robin M. (2004). "Simulations of a late lunar-forming impact". Icarus 168 (2): 433–456. doi:10.1016/j.icarus.2003.09.028. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 2004Icar..168..433C. http://www.sciencedirect.com/science/article/pii/S0019103503002999. பார்த்த நாள்: 2015-10-13. 
  6. Canup, Robin M. (2004). "Dynamics of Lunar Formation". Annual Review of Astronomy and Astrophysics 42 (1): 441–475. doi:10.1146/annurev.astro.41.082201.113457. Bibcode: 2004ARA&A..42..441C. https://dx.doi.org/10.1146/annurev.astro.41.082201.113457. பார்த்த நாள்: 2015-10-13. 
  7. "NASA Lunar Scientists Develop New Theory on Earth and Moon Formation". NASA Press Release (NASA). 2012-10-30. http://www.nasa.gov/topics/solarsystem/features/moon_formation.html. பார்த்த நாள்: 2012-12-05. 
  8. Origin of the Earth and Moon. Robin M. Canup, Kevin Righter (eds.) (2nd ). Tucson : Houston: University of Arizona Press. 2000-11-01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8165-2073-2. 
  9. Canup, Robin M. (2005-01-28). "A Giant Impact Origin of Pluto-Charon". Science 307 (5709): 546–550. doi:10.1126/science.1106818. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-9203. பப்மெட்:15681378. Bibcode: 2005Sci...307..546C. http://www.sciencemag.org/content/307/5709/546. பார்த்த நாள்: 2015-10-13. 
  10. Finn, Ed (2004-10-29). "Robin Canup". Popular Science. http://www.popsci.com/scitech/article/2004-10/robin-canup. பார்த்த நாள்: 2015-10-13. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபின்_கானூப்&oldid=2465869" இருந்து மீள்விக்கப்பட்டது