இராபர்ட் வில்லியம் பாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராபர்ட்டு வில்லியம் பாயில்
Robert Boyle 0001.jpg
இராபர்ட்டு வில்லியம் பாயில் (1627–91)
பிறப்பு25 சனவரி 1627
இலிசுமோர், வாட்டர்போர்டு கவுண்ட்டி, அயர்லாந்து
இறப்பு31 திசம்பர் 1691(1691-12-31) (அகவை 64)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஐரிசுக்காரர்
துறைஇயற்பியல், வேதியியல்
கல்விஈட்டன் கல்லூரி
குறிப்பிடத்தக்க மாணவர்கள்இராபர்ட்டு ஊக்கு
அறியப்படுவது
தாக்கம் 
செலுத்தியோர்
பின்பற்றுவோர்ஐசக் நியூட்டன்[3]
விருதுகள்FRS (1663)[4]

இராபர்ட்டு வில்லியம் பாயில் FRS [4] (Robert William Boyle, 25 ஜனவரி 1627 - 31 டிசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாகக் கருதப்படுகிறது. இவர் இறைபக்தி நிறைந்து விளங்கியவர் என்பதை இறையியல் சார்ந்த அவரது எழுத்துக்கள் மூலம் அறியலாகிறது.

இளமை காலம்[தொகு]

1627 ஜனவரி 25-இல் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் (அயர்லாந்து நாட்டின் மாநில செயலராக இருந்த சர் ஜாப்ரி பென்றன் மற்றும் ஆலிஸ் வெஸ்டன் இவர்களின் மகள்) தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக அயர்லாந்து நாட்டு, வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இரிச்சர்டு பாயில் அயர்லாந்தில் உள்ள டூடர் தோட்டங்களில் துணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக 1588ல் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக்கு வந்தார். இரிச்சர்ட்டு பாயில் நில சுவானாக இருந்த காலத்தில் தான் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது தன் மூத்த சகோதரர்களைப் போன்று அயர்லாந்து குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டார். பாயில் தனியார் பாடசாலை மூலம் இலத்தின், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இவர் தனது எட்டாவது அகவையில் தாயை இழந்தார். இவரது தந்தையின் நண்பரான சர்.ஹென்றி வோட்டன் இங்கிலாந்தில் உள்ள ஈட்டன் கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்காலத்தில் இராபர்ட்டு காரே என்னும் தனியார் பயிற்றுநரை ஐரிசு மொழியறிவை இராபர்ட்டு வில்லியம் பாயில் பெற்றுக் கொள்ளுவதற்கு அவரது தந்தை பணி அமர்த்தினார். இருப்பினும் இவருக்கு ஐரிசு மொழியில் ஆர்வம் ஏற்படவில்லை. மூன்று ஆண்டுகள் ஈட்டனில் கழித்த பிறகு பிரெஞ்சு பயிற்றுநருடன் வெளிநாடு சென்றார். 1641ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டினைப் பார்வையிட்டனர். அந்நாட்களில் வாழ்ந்த கலிலியோ கலிலீ என்பவரின் பெரு நட்சத்திரங்களின் முரண்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும்படி குளிர்காலத்தில் பிளாரன்ஸ் மாகாணத்தில் தங்கினார்.

விருதுகள்[தொகு]

இராயல் சொசைட்டி என்னும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவராய் இருந்த பாயில் Fellow of the Royal Society (FRS) 1663-இல் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[4] பாயில் விதி என்பது இவரது பெயரை ஒட்டி வழங்கப்படுகிறது.</ref>

மேற்கோள்கள்[தொகு]

https://www.britannica.com/biography/Robert-Boyle

  1. Marie Boas, Robert Boyle and Seventeenth-century Chemistry, CUP Archive, 1958, p. 43.
  2. O'Brien, John J. (1965). "Samuel Hartlib's influence on Robert Boyle's scientific development". Annals of Science 21 (4): 257–276. doi:10.1080/00033796500200141. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3790. 
  3. "Philosophical tract from Mr Isaac Newton".. (February 1678). Cambridge University. “But because I am indebted to you & yesterday met with a friend Mr Maulyverer, who told me he was going to London & intended to give you the trouble of a visit, I could not forbear to take the opportunity of conveying this to you by him.” 
  4. 4.0 4.1 4.2 "Fellows of the Royal Society". London: Royal Society. மூல முகவரியிலிருந்து 2015-03-16 அன்று பரணிடப்பட்டது.