இராபர்ட்டு மெட்கால்ஃபு
இராபர்ட்டு மெட்கால்ஃபு Robert Metcalfe | |
---|---|
![]() 2004 ஆம் ஆண்டில் இராபர்ட்டு மெட்கால்ஃபு | |
பிறப்பு | இராபர்ட்டு மெலாங்க்டன் மெட்கால்ஃபு ஏப்ரல் 7, 1946 புரூக்ளின், அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | பாக்கெட் தொடர்பு (1973) |
ஆய்வு நெறியாளர் | ஜெஃப்ரி பி. பூசென் |
அறியப்படுவது | இணையம் முன்னோடி, ஈதர்நெட் கண்டுபிடிப்பு, 3காம் நிறுவனர், மெட்கால்ஃபு விதி |
விருதுகள் |
தூரிங்கு விருது (2022) |
துணைவர் | இராபின் |
பிள்ளைகள் | 2 |
இராபர்ட்டு மெலாங்க்டன் மெட்கால்ஃபு (Robert Melancton Metcalfe) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பொறியாளரும், தொழில் முனைவோரும் ஆவார். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் இணையத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறார். கணினி வலையமைப்பில் பயன்படுத்தப்படும் ஈதர்நெட்டு நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அமெரிக்க இலக்கமுறை மின்னணு உற்பத்தி நிறுவனமான 3காம் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் அறியப்படுகிறார். தொலைத்தொடர்பு வலையமைப்பின் விளைவை விவரிக்கும் மெட்கால்ஃப் சட்டத்தை உருவாக்கினார். 1990 ஆம் ஆண்டுகளில் இணையத்தின் எதிர்காலப் போக்கை முன்னறிவிப்பது உட்பட பல கணிப்புகளை மெட்கால்ஃப் செய்துள்ளார்.
மெட்கால்ஃப்பின் ஈதர்நெட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிக்காக உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்திற்கான தொழில்முறை இல்லமமான மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகத்தின் கௌரவப் பதக்கம், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய பதக்கம் போன்ற பதக்கங்களைப் பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், கணினி அறிவியலில் மிக உயர்ந்த தனித்துவமான விருதான டூரிங் விருதைப் பெற்றார். அமெரிக்காவின் டெக்சாசு பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் புதுமை மற்றும் தொழில்முனைவோர் பிரிவில் பேராசிரியராக இருந்து வருகிறார். அரசுக் கட்டுப்பாடற்ற தனியார் தொழிலாட்சி அமைப்பின் மர்ச்சிசன் உறுப்பினராகவும் செயல்படுகிறார்.[2]
இளமைப் பருவம்[தொகு]
இராபர்ட் மெட்கால்ஃபு ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கு மாநிலத்தின் புரூக்ளினில் நகரத்தில் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார்.[3][4] இவரது தந்தை சுழலாழி கருவியில் நிபுணத்துவம் பெற்ற சோதனை தொழில்நுட்ப வல்லுநராக இருந்தார். இவரது தாயார் ஒரு இல்லத்தரசி ஆவார். பின்னர் அவர் பே சோர் உயர்நிலைப் பள்ளியில் செயலாளராக இருந்தார். மெட்கால்ஃபு 1964 ஆம் ஆண்டில் அந்தப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[5] Metcalfe graduated from that school in 1964.[6][5]
1969 ஆம் ஆண்டில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் மற்றும் தொழில்துறை நிர்வாகம் என்ற பாடங்களில் இரண்டு இளங்கலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பள்ளிக்குச் சென்றார். அங்கு இவர் 1970 ஆம் ஆண்டு பயன்பாட்டுக் கணிதத்தில் முதுகலை அறிவியல் பட்டமும், 1973 ஆம் ஆண்டில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[4] [7]
மெட்கால்ஃப் - இராபின் இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Computer History Museum 2008 Fellow Awards" இம் மூலத்தில் இருந்து October 3, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081003021101/http://www.computerhistory.org/fellowawards/2008_fellow_awards.html.
- ↑ "Inventor of Ethernet and Venture Capital Executive Bob Metcalfe to Lead Innovation Initiatives at UT ECE" இம் மூலத்தில் இருந்து 2011-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110722194132/http://www.ece.utexas.edu/aboutece/research_detail.cfm?id=61.
- ↑ "Robert Metcalfe, Inventor Profile". National Inventors Hall of Fame இம் மூலத்தில் இருந்து 2008-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080104155456/http://invent.org/Hall_Of_Fame/353.html.
- ↑ 4.0 4.1 "Robert M. Metcalfe | IEEE Computer Society" (in en-US). https://www.computer.org/profiles/robert-metcalfe.
- ↑ 5.0 5.1 Shustek, Len (2007). "Oral History of Robert Metcalfe". https://archive.computerhistory.org/resources/text/Oral_History/Metcalfe_Robert_1/Metcalfe_Robert_1_2.oral_history.2006.7.102657995.pdf.
- ↑ "Q&A: Robert Metcalfe on the "Inoversity"" (in en). https://news.mit.edu/2016/robert-metcalfe-inoversity-0628.
- ↑ Metcalfe, Robert Melancton (1973). Packet Communication (PhD Thesis). Harvard University. இணையக் கணினி நூலக மையம்:1243034442. https://id.lib.harvard.edu/alma/990038945730203941/catalog.
- ↑ "The Legend of Bob Metcalfe". Wired. November 1998 இம் மூலத்தில் இருந்து 2008-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080516045024/http://www.wired.com/wired/archive/.
புற இணைப்புகள்[தொகு]
- A more detailed interview
- Why IT Matters
- Video Interview of Robert Metcalfe on March 10, 2009 at the Computer History Museum
- IEEE History Center biography at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது ஆகத்து 27, 2002)