இராபர்ட்டின் நான்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராபர்ட்டின் நான்மர்
Phot-34a-05-fullres.jpg
கண்டறிந்த தகவல்கள் (ஊழி J2000)
விண்மீன் குழு(க்கள்)தெற்கு விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்0h 21m 23.075s
பக்கச்சாய்வு-48° 37.75′ 39.5″
Other designations
AM 0018-485


இராபர்ட்டின் நான்மர் (Robert's Quartet ) என்பது நெருக்கமாக அமைந்துள்ள விண்மீன் பேரடைகளின் ஒரு குழுவாகும். இது தெற்கு வின்மீன் குழாமில் கிட்டத்தட்ட 160 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இக்குழுவில் நான்கு வெவ்வேறு வகையான விண்மீன் பேரடைகள் ஒன்றுக்கொன்று ஈர்ப்பு விசையால் இழைந்தும் குழைந்தும் இடைவினை புரிகின்றன. புபொப 87, புபொப 88, புபொப 89 மற்றும் புபொப 92 ஆகியன இக்குழுவில் உள்ள உறுப்பினர்களாகும். இக்குழுவை சான் எர்சல் 1830 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். புபொப 101 என்று பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பும் இக்குழுவுடன் சிறிதளவு தொடர்பு கொண்டுள்ளது.

நெருக்கமான விண்மீன் பேரடைகளின் குழுவிற்கு இராபர்ட்டின் நான்மர் குழு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். ஏனெனில் இது போன்ற குழுக்களில் மிகக்குறுகிய பிரதேசத்தில் நான்கு முதல் எட்டு விண்மீன் பேரடைகள் அடங்கியிருக்கும். அண்ட இடைவினைகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் குறிப்பாக விண்மீன்கள் உருவாக்கம் தொடர்பான கருத்துகளை கண்டறிய நல்ல ஆய்வுக்கூடங்களாக அவை உள்ளன. இக்குழுவின் ஒட்டுமொத்த தோற்ற ஒளிஅளவு 13 ஆகும். இக்குழுவில் பிரகாசமாக உள்ள பேரடையின் தோற்ற ஒளிஅளவு 14 ஆகும். வானத்தில், இந்நான்கு விண்மீன் பேரடைகளும் 1.6 கோணத்துளி ஆரம் கொண்ட ஒரு வட்டத்திற்குள் 75,000 ஒளி ஆண்டுகள் தொலைவு தொடர்புடையனவாக உள்ளன. ஆல்டன் ஆர்பு மற்றும் பாறி எப் மடோர் ஆகியோர் இவற்றிற்குப் பெயரிட்டனர். மேலும் 1987 ஆம் ஆண்டில் தெற்கிலுள்ள விசித்திரமான விண்மீன் பேரடைகள் மற்றும் குழுக்கள் என்று ஒரு பெயர்ப் பட்டியலையும் தொகுத்தனர்.

உறுபினர்கள்[தொகு]

Members of Robert's Quartet
பெயர் வகை சூரியனிடமிருந்து தொலைவு
(மில்லியன் ஒஆ)
தோற்றப் பொலிவு
புபொப 87 IBm pec. 155 +14.5
புபொப 88 SB(rs)a pec. 156 +15.21
புபொப 89 SB0(s)a pec. 149 +14.57
புபொப 92 SAa pec. 146 +14.29
புபொப 101 Sc 154 +13.46
இராபர்ட்டின் நான்மரில் உள்ள மிகப்பெரிய உறுப்பினர் புபொப 92 ஆகும். இது ஒரு வித்தியாசமான சுருள் Sa வகை விண்மீன் பேரடையாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

வெளிப்புற இனைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: Sky map 00h 21m 23.075s, −48° 37.75′ 39.5″