இராது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராது என்றறியப்படும் ராது எஸ். இராதாகிருஷ்ணன் ( -2009) தமிழ்நாட்டில் முதுபெரும் நாடகக் கலைஞராகத் திகழ்ந்தவர். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஊழியரான இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் ஈடுபட்டு 47 நாடகங்களை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நடத்தியுள்ளார். நாடகத்துறையில் பங்களித்தமைக்காக தமிழ்நாடு அரசு 2001 ஆம் ஆண்டில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவர் நாடக கலாசாரதி,[1] நாடக கலா சிரோன்மணி மற்றும் நாடக இரத்னா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் மிகச் சிறந்தப் படைப்பான "கல்யாணத்தில் கலாட்டா" பல்வேறு நிகழ்ச்சிகளில் அரங்ககேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் நாடகங்களைத் தொடர்ந்து 36 மணி நேரம் அரங்ககேற்றம் செய்த நிகழ்வு, நாடகத் தொடரோட்ட வகையில் லிம்கா சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Nataka Kalasarathy conferred on eminent dramatist". The Hindu. 3 July 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/quotnataka-kalasarathyquot-conferred-on-eminent-dramatist/article3099455.ece. பார்த்த நாள்: 1 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராது&oldid=3054602" இலிருந்து மீள்விக்கப்பட்டது