இராதிகா ஹெர்ஸ்பெர்கர்
இராதிகா ஹெர்ஸ்பெர்கர் | |
---|---|
பிறப்பு | இராதிகா ஜெயகர் 1938 (அகவை 86–87) உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் |
பெற்றோர்(கள்) | மனோகர் ஜெயகர் பூபுல் செயகர் |
வாழ்க்கைத் துணை | ஆன்ஸ் ஹெர்ஸ்பெர்கர் |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
Official web site |
இராதிகா ஹெர்ஸ்பெர்கர் (Radhika Herzberger) என்கிற ஜெயகர் (பிறப்பு 1938) ஓர் இந்திய எழுத்தாளரும், கல்வியாளரும் மற்றும் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் அறிஞரும் ஆவார்.[1] ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள இரிஷி பள்ளத்தாக்கு பள்ளியில் வசிக்கும் இவர், 1920களில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் நிறுவப்பட்ட இரிஷி பள்ளத்தாக்குக் கல்வி மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]
இவர் உத்தரப் பிரதேசத்தில் இராதிகா ஜெயகர் என்ற பெயரில் மனோகர் ஜெயகர் மற்றும் பூபுல் செயகர் ஆகியோருக்கு 1938 இல் பிறந்தார். தொராண்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு,[2] இரிஷி பள்ளத்தாக்கு கல்வி மையத்தில்[3] வரலாற்றில் பயிற்றுவிப்பாளராக சேர்ந்தார்.[4] இறுதியில் அந்நிறுவனத்தின் இயக்குநரானார்.[1][5]
வெளியீடுகள்
[தொகு]இராதிகா ஹெர்ஸ்பெர்கர் இந்திய பாரம்பரிய ஆய்வுகளின் ஒரு பகுதியாக ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டின் இந்திய சிந்தனையின் வளர்ச்சியில் ஒரு கட்டுரை என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.[6] இந்தியன் ஜர்னல் ஆஃப் பிலாசபி போன்ற பத்திரிகைகளிலும் இவர் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [7][8][9]
விருதுகள்
[தொகு]இலக்கியம் மற்றும் கல்வித் துறைகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Good News". Good News. 2014. Retrieved 26 October 2014.
- ↑ "Rishi valley profile". Rishi valley. 2014. Retrieved 26 October 2014.
- ↑ "Rishi Valley Education Centre". Rishi Valley Education Centre. 2014. Retrieved 26 October 2014.
- ↑ "Rishi valley profile". Rishi valley. 2014. Retrieved 26 October 2014.
- ↑ "TOI". TOI. 30 August 2008. Retrieved 26 October 2014.
- ↑ Radhika Herzberger (30 April 1986). Bhartrhari and the Buddhists: An Essay in the Development of Fifth and Sixth Century Indian Thought (Studies of Classical India). Springer. p. 284. ISBN 978-9027722508.
- ↑ Radhika Herzberger and A Kumaraswamy (2014). "Independent Schools as Resource Centres". India Seminar. Retrieved 26 October 2014.
- ↑ Radhika Herzberger (January 1990). "Living lightly on earth". India Seminar. Retrieved 26 October 2014.
- ↑ Hans G. Herzberger, Radhika Herzberger (1981). "Bhartrhari's paradox". Indian Journal of Philosophy 9 (1): 1–17. http://philpapers.org/rec/HERBP.
- ↑ "Padma 2013". Press Information Bureau, Government of India. 25 January 2013. Retrieved 10 October 2014.
- Radhika Herzberger (30 April 1986). Bhartrhari and the Buddhists: An Essay in the Development of Fifth and Sixth Century Indian Thought (Studies of Classical India). Springer. p. 284. ISBN 978-9027722508.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Padma Awards List". Indian Panorama. 2014. Retrieved 12 October 2014.
- "India Today interview". India Today. 31 May 1995. Retrieved 26 October 2014.
- "Krishnamurti, chronicles of a less ordinary life". YouTube video. 25 February 2012. Retrieved 26 October 2014.