இராதிகா திலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதிகா திலக்
பிறப்பு1969
இறப்பு20 செப்டம்பர் 2015
பணிபின்னணி பாடகி
வாழ்க்கைத்
துணை
சுரேஷ்

இராதிகா திலக் (Radhika Thilak) (1969 - 20 செப்டம்பர் 2015) இந்தியவைச் சேர்ந்த மலையாள மொழிப் பின்னணி பாடகியாவார்.[1] மலையாளத் திரைப்ப படங்களில் 70 பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3][4][5][6][7]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், எர்ணாகுளம் சின்மயா வித்யாலயாவிலும், புனித தெரசா கல்லூரியிலும் தனது கல்வியைப் பெற்றார். இவருக்கு சுரேஷ் என்பவருடன் 1992இல் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு தேவிகா என்ற மகள் இருக்கிறார். பிரபல பாடகர்கள் சுஜாதா மோகன் & ஜி.வேணுகோபால் இவரது உறவினர்கள்.

தொழில்[தொகு]

"அருணகிரண தீபம்", "தேவ சங்கீதம்", "மாய மஞ்சளில்", "கைதாபூ மனம்", "திருவாதிரா தீரா நோக்கியா", "என்டே உல்லுதுக்கம் கோட்டி", "நின்டே கண்ணில்" ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் சில.[8] திரைப்படப் பாடல்களைத் தவிர, பக்தி பாடல்களையும் இவர் பாடியிருந்தார்.[9] இவர் ஒரு பிரபலமானத் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இருந்தார்.[10][11]

இறப்பு[தொகு]

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்த இவர்.[12] 20 செப்டம்பர் 2015 அன்று, கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனது 46 வயதில் இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Radhika Thilak Bio | Radhika Thilak Career". MTV. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  2. "Malayalam playback singer Radhika Thilak dies at 45". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  3. "Singer Radhika Thilak is dead". The Hindu. 30 August 2015. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  4. Correspondent, Our. "Radhika Thilak and her voice become a memory". English.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
  5. Sachin Jose. "Radhika Thilak: Popular Hindu, Christian devotional songs by late playback singer". Ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
  6. Sachin Jose (2015-09-20). "Radhika Thilak dies at 45; Mohanlal, Oommen Chandy mourn Malayalam playback singer's untimely death". Ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
  7. "Singer Radhika Thilak dies after losing the battle to cancer : Regional cinema, News - India Today". Indiatoday.intoday.in. 2015-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
  8. "List of Malayalam Songs by Singers Radhika Thilak". En.msidb.org. 26 January 2009. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  9. "List of Songs Sung by Radhika Thilak". Firstshowreview. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  10. Correspondent, Our. "Playback singer Radhika Thilak passes away". English.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  11. Sachin Jose. "Radhika Thilak death: 10 songs to remember deceased playback singer". Ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  12. "Singer Radhika Thilak Death". TNPlive (hyderabad). 21 September 2015. http://www.telangananewspaper.com/singer-radhika-thilak-death-malayalam-playback. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Radhika Thilak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_திலக்&oldid=3706912" இலிருந்து மீள்விக்கப்பட்டது