உள்ளடக்கத்துக்குச் செல்

இராதிகா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதிகா சௌத்ரி
பிறப்புஇராதிகா சௌத்ரி
20 அக்டோபர் 1984 (1984-10-20) (அகவை 40)
பணிநடிகை, இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–2011

ராதிகா சவுத்ரி என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். முக்கியமாக 2000 களின் முற்பகுதியில் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார். 2010 இல், லாஸ் வேகாஸ் திரைப்பட விழாவில் விருதை வென்ற அமெரிக்காவில் திரைப்பட இயக்குனராக மீண்டும் வந்தார்.[1]

தொழில்

[தொகு]

இராதிகா இந்தியாவின் புனே பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு மக்கள் செய்தித் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் சுமார் 30 இந்திய திரைப்படங்களில் பல மொழிகளில் நடித்துள்ளார். இதில் தேரே நாம் மற்றும் குஷி போன்ற படங்களில் நடித்த பல்வேறு பாத்திரங்கள், பாடல்களுக்கு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.

2010 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட இயக்குனராக இவர் மீண்டும் வந்தார். லாஸ் வேகாஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான சில்வர் ஏஸ் விருதை வென்றார், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குறும்படமான ஆரஞ்சு ப்ளாசம் . என்ற அந்தப் படம் நான்கு நாட்களில் லாஸ் ஏஞ்சல்சில் படமாக்கப்பட்டது, 17 நிமிட படம் ஒரு தாயானவள் தன் கணவனிடமிருந்து பிரிந்த வேதனையை கடந்து செல்லும் கதையைக் கொண்டது அப்படம். அப்படத்தில் உஷா கோகோடே கதாநாயகியாக நடித்தார், ஜெஃப் டூசெட், ஜான் பால் ஓவியர் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்தனர்.[2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1999 சம்பையா தெலுங்கு
கண்ணுபடப்போகுதய்யா தமிழ்
டைம் தமிழ்
2000 சிம்மாசனம் தமிழ்
குரோதம் 2 தமிழ்
பிரியமானவளே சௌமியா தமிழ்
2001 ஹுச்சன மதுவேயலி உண்டோன ஜனா கன்னடம்
மிடில் கிளாஸ் மாதவன் தமிழ்
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் தமிழ்
குங்குமப்பொட்டுக்கவுண்டர் தமிழ்
நுவ்வு நேனு பிரியா தெலுங்கு
பார்த்தாலே பரவசம் ரேகா தமிழ்
2002 ஷக்கலக்கபேபி தமிழ்
தப்புச்சேசி பப்புக்குடு சீச்சா தெலுங்கு
நந்தி பிங்கி கன்னடம்
2003 குஷி ரோமா இந்தி
விகடன் தமிழ்
தேரே நாம் ஊமை பிச்சைக்காரி இந்தி சிறிய காட்சியில்
மா அல்லுடு வெரி குட் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2003 ஒக்க பெல்லாம் முத்து ரெண்டோ பெல்லம் வட்டு தெலுங்கு
ஐத்தே என்டி தெலுங்கு
மீ இன்டிகோஸ்டே எமிஸ்டாரு மா இன்டிகோஸ்டே எமி டெஸ்டாரு தெலுங்கு
2004 சீனு வசந்தி லட்சுமி தெலுங்கு
என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு பார்வதி தமிழ்
2010 தி ஹன்ச்பேக் ஆங்கிலம்

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தயாரிப்பு பங்கு குறிப்புகள்
2010 கல்ட் 11 செல்வி ரவி அத்தியாயம்: "நர்ஸ் ஜேனட்டின் ஹாப்பி பிளேஸ்"
2011 அவுட்சோர்ஸ் கர்ப்பிணி பெண் அத்தியாயம்: "டிரெயினிங் டே"

குறிப்புகள்

[தொகு]

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. [1]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_சௌத்ரி&oldid=4152829" இலிருந்து மீள்விக்கப்பட்டது