உள்ளடக்கத்துக்குச் செல்

இராதிகா குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதிகா குமாரசுவாமி
ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதலுக்கான சிறப்பு பிரதிநிதி
பதவியில்
ஏப்ரல் 2006 – 13 சூலை 2012
இலங்கை அரசியலமைப்பு சபையின் குடிமைப் பிரதிநிதி
பதவியில்
10 செப்டம்பர் 2015 – 10 செப்டம்பர் 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 செப்டம்பர் 1953 (1953-09-17) (அகவை 71)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கை
பெற்றோர்இராஜேந்திர குமாரசுவாமி (தந்தை)
விஜயாமணி (தந்தை)
உறவினர்இந்திரஜித் குமாரசுவாமி (சகோதரன்)
முன்னாள் கல்லூரியேல் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
அமெர்ஸ்ட் கல்லூரி
எடின்பரோ பல்கலைக்கழகம்
எசெக்ஸ் பல்கலைக்கழகம்
கியூனி சட்டப்பள்ளி
ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டுப் பள்ளி
விருதுகள்தேசமான்ய

தேசமான்ய இராதிகா குமாரசுவாமி (Radhika Coomaraswamy) (பிறப்பு: செப்டம்பர் 17, 1953) [1] இலங்கையின் வழக்கறிஞரும், இராஜதந்திரியும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பு-பொதுச்செயலாளராகவும், குழந்தைகள் மற்றும் ஆயுத மோதலுக்கான சிறப்பு பிரதிநிதியாகவும், 13 சூலை 2012 வரை பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஏப்ரல் 2006 இல் இவரை இந்த பதவிக்கு நியமித்தார். [2] இவர் செப்டம்பர் 10, 2015 அன்று குடிமைப் பிரதிநிதியாக இலங்கை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், ரோகிங்கியா மக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்குப் பிறகு, இவர் மியான்மர் மீதான ஐக்கிய நாடுகள் அவையின் உண்மை கண்டறியும் பணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

குடும்பம்

[தொகு]

இராதிகா 17 செப்டம்பர் 1953 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார். இவர் அரசு ஊழியர் இராஜேந்திர குமாரசாமி (ரோவிங் ராஜு) - விஜயாமணி ஆகியோரின் இளைய மகள். இவரது தந்தைவழி தாத்தா செல்லப்பா குமாரசுவாமி ஒரு அரசு ஊழியர். இவரது தாய்வழி தாத்தா எஸ். கே. விஜயரத்னம் நிகம்போ நகர சபையின் தலைவராக இருந்தார். [3] இவருக்கு இந்திரஜித் குமாரசுவாமி என்ற ஒரு மூத்த சகோதரர் உள்ளார்.

கல்வி

[தொகு]

இராதிகா, நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச பள்ளியில் பட்டம் பெற்றவர். யேல் பல்கலைக்கழகத்திலிருந்து தனது இளங்கலை பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் முனைவர் பட்டமும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும், அமெர்ஸ்ட் கல்லூரியிலிருந்தும், எடின்பரோ பல்கலைக்கழகம், இலியூவென் பல்கலைக் கழகம், எடின்பரோ பல்கலைக்கழகம், எசெக்ஸ் பல்கலைக்கழகம், கியூனி சட்டப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து தனது முனைவர் பட்டத்தையும், மதிப்புறு முனைவர் பட்டங்களையும் பெற்றார்.

தொழில்

[தொகு]

குமாரசாமி பயிற்சியின் மூலம் ஒரு வழக்கறிஞராகவும், முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். சர்வதேச அளவில் அறியப்பட்ட மனித உரிமை வழக்கறிஞராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு அறிக்கையாளராக (1994-2003) பணியாற்றியுள்ளார்.

அங்கீகாரம்

[தொகு]

நாட்டிற்கும் உலகிற்கும் இவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக இலங்கை சனாதிபதி நவம்பர் 2005 இல், இவருக்கு மதிப்புமிக்க தேசிய கௌரவமான தேசமான்ய என்ற பட்டத்தை வழங்கினார். அமெரிக்க வழக்கறிஞர் சங்கத்தின் சர்வதேச சட்ட விருது, சர்வதேச மனித உரிமைகள் சட்டக் குழுவின் மனித உரிமைகள் விருது, 2000 இன் புருனோ கிரீஸ்கி விருது ,ஓசுலோ பல்கலைக்கழகத்தின் லியோ எட்டிங்கர் மனித உரிமைகள் பரிசு, இடேட்டன் பல்கலைக்கழக விருது, பேராயர் ஆஸ்கார் ரோமெரோ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் வில்லியம் ஜே. பட்லர் விருது, மக்கில் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் எஸ். இலித்வாக் விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Radhika Coomaraswamy – Sri Lanka". Archived from the original on 2021-08-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  2. Special Representative for Children and Armed Conflict
  3. Ladduwahetty, Ravi (13 December 2012). "Dr Manmohan Singh was committed to non-interference with Asian economies". The Island இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181201135217/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=68154. 

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_குமாரசுவாமி&oldid=4064461" இலிருந்து மீள்விக்கப்பட்டது