இராதா பூவேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராதா பூவேந்திரன் (Radha Poovendran ) அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். வலைப்பின்னல் பாதுகாப்பு ஆய்வகத்தின் நிறுவன இயக்குநராகவும், வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் தகவல் உத்தரவாத ஆராய்ச்சிப் பிரிவின் இணை இயக்குநராகவும் செயற்பட்டு வருகிறார். இப்பல்கலைக்கழகத்தின் தகவல் பாதுகாப்பு கல்வி மற்றும் வலைப்பின்னல் கல்வி பரப்புரை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தேசிய அறிவியல் அறக்கட்டளையுடன் இணைந்து, இவர் 2016 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட சமூகங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான பட்டறையின் தலைவராகவும் முதன்மை ஆய்வாளராகவும் பணியாற்றினார். [1]

பூவேந்திரனின் ஆராய்ச்சி கம்பியிலா மற்றும் உணரி வலைப்பின்னல் பாதுகாப்பு, எதிர் படிமமாக்கல், பொது கம்பியிலா வலைப்பின்னல்களின் தனியுரிமை மற்றும் இணையவெளி பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஓர் இணை ஆசிரியராக இத்தலைப்பு தொடர்பான நூல்கள் சிலவற்றையும் பூவேந்திரன் எழுதியுள்ளார். மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழக உறுப்பினர் தகுதி மற்றும் சிறந்த முன்னாள் மாணவர் உள்ளிட்ட பல விருதுகளை இராதா பூவேந்திரன் பெற்றுள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Radha Poovendran faculty page". Electrical & Computer Engineering Department webpage. University of Washington. பார்க்கப்பட்ட நாள் 5 January 2020.
  2. "IEEE Fellows 2015". IEEE Communications Society. பார்க்கப்பட்ட நாள் 5 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_பூவேந்திரன்&oldid=3306803" இலிருந்து மீள்விக்கப்பட்டது