இராதாநாத் ராத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதாநாத் ராத்
வளர்ச்சிக்கான அமைச்சர்
பதவியில்
1957 ஏப்ரல் 6 – 1961 பிப்ரவரி 25
நிதி மற்றும் கல்வி அமைச்சர்
பதவியில்
1952 ஏப்ரல் 7 – 1956 அக்டோபர்
உறுப்பினர்: ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1971–1977
தொகுதிஆதாகர் சட்டமன்றத் தொகுதி
உருப்பினர்: PI2, 1st and 2nd Odisha Legislative Assembly
பதவியில்
1946–1961
தொகுதிஆதாகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-12-06)6 திசம்பர் 1896
இராதநாத்பூர் சாசன், ஆதாகர்
இறப்பு11 பெப்ரவரி 1998(1998-02-11) (அகவை 101)
கட்டக், ஒடிசா
இளைப்பாறுமிடம்சத்யாபதி, புரி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாவித்திரி ராத்
பிள்ளைகள்மனோரமா, சாந்தி
கல்விமெட்ரிகுலேசன்
முன்னாள் கல்லூரிஇராவின்சா கல்லூரிப் பள்ளி
தொழில்எழுத்தாளர், அரசியல்வாதி

மருத்துவர் இராதாநாத் ராத் (Radhanath Rath) (பிறப்பு 1896 திசம்பர் 6- இறப்பு: 1998 பிப்ரவரி 11) [1] ஆதாகரின் இராதநாத்பூர் சாசன் என்ற கிராமத்தில் [2] பிறந்த இவர் பாலாச்சூர் என்ற ஊரிலிலுள்ள ஜூபிலி பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். அங்கு இவரது மாமா உலோகநாத் மொகாபத்ரா சமசுகிருத ஆசிரியராக இருந்தார். இவர் முதல் 1916 இல் கட்டக் இரவென்சா கல்லூரிப் பள்ளியில் தனது மெட்ரிகுலேசனை முடித்தார்.

பின்னர், சிங்க்பூம் மாவட்ட வனத்துறையில் எழுத்தராக சேர்ந்தார். 1919 இல் அந்த வேலையை விட்டு வெளியேறிய இவர் கோபபந்து தாசின் சத்தியபதி அச்சகத்தில் சேர்ந்தார். கோபபந்து தாசின் தலையங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட " தி சமாஜா " என்ற ஒரியா வார இதழின் மேலாளர் மற்றும் உதவி ஆசிரியராக [3] பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1928 ஆம் ஆண்டில் கோபபந்து தாஸ் இறந்த பிறகு, பண்டிட் இலிங்கராஜ் மிசுரா "சமாஜ்" பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டில், சமாஜின் தினசரி வெளியீடு தொடங்கப்பட்டது. 1946-1952 காலத்தில் இலிங்கராஜ் மிசுரா ஒடிசாவின் கல்வி அமைச்சராக பணியாற்றினார். எனவே இராதநாத் ராத் "சமாஜ்" பத்திரிகையின் ஆசிரியரானார்.

1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்த இவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் ஒடிசா சட்டமன்றத்தில் 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில், 1946 ஆம் ஆண்டில், ஆதாகரிலிருந்து மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 மற்றும் 1967 க்கு இடையில் தவிர, இவர் 1946 முதல் 1977 வரை சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். 1952 முதல் 1961 வரை நிதி, கல்வி, வனவியல் மற்றும் வேளாண்மைக்கு அமைச்சராக பணியாற்ரினார். இராதாநாத் ராத் 1952 முதல் 1959 வரையிலான காலப்பகுதியில் நபக்ருட்டிண சௌத்ரியின் அமைச்சரவையில் நிதி மற்றும் கல்வி அமைச்சரானார். 1959 ஆம் ஆண்டில் ஹரேக்ருட்டிணா மகாதாபின் அமைச்சரவையின் கீழ் வளர்ச்சி மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியையும் வகித்தார். [4]

இவர் வாழ்நாள் உறுப்பினராகவும், பஞ்சாபின் லாலா லஜ்பத் ராய் அமைத்த ' மக்கள் சங்கத்தின் ஊழியர்கள் ' என்ற அமைப்பின் ஒடிசா கிளையின் தலைவராகவும் இருந்தார். இவர் 1981 மே முதல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அச்சங்கத்தின் தலைவராக இருந்தார். [5] ஒடிசாவின் அகில இந்திய சாரணர் மற்றும் வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இந்த் தொழுநோய் ஒழிப்புக் குழு, கோபபந்து தரித்ரா நாராயண் சேவா சங்கம் போன்ற பல அமைப்புகளுடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைத் வேந்தராகவும் இருந்தார். இவர் பல கவிதைகள், கதைகள் மற்றும் சுயசரிதைகளை எழுதியுள்ளார். "மோ ஜெல் சுமிருதி லிப்பி" அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். இவர் 1998 பிப்ரவரி 11 அன்று கட்டாக்கில் இறந்தார். பூரிக்கு அருகிலுள்ள சத்தியபதியில் இவரது உடல் முழு மாநில மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. [6]

விருதுகள்[தொகு]

  • ஒரிசா சாகித்திய அகாதமி, 1967 [7]
  • பத்மா பூசண், 1968 [8]
  • கிரிட்டிக் சர்க்கிள் ஆஃப் இந்தியா விருது, 1987
  • 1988 இல் அகில இந்திய அனுபிரதா விருது
  • உத்கல் இரத்னா சம்மன் (1993, உத்கல் சாகித்ய சமாஜ்)
  • டசட்டத்தில் முனைவர் பட்டம் ( பெர்காம்பூர் பல்கலைக்கழகம் ), 1976.

குறிப்புகள்[தொகு]

  1. "Dr. Radhanath Rath: Doyen of Odisha journalism". odishatoday.com. 2011. Archived from the original on 17 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013. Dr Rath was born on December 6, 1896 in a poor brahmin family in the then princely state of Athgarh {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Eminent Persons -123orissa.com". 123orissa.com. Archived from the original on 16 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. .Dr. Radhanath Rath was born in a village named "Radhanathpur Shashan" of Aathgarh. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Dr. Radhanath Rath (1896–1998)". orissaboutique.com. 2009. Archived from the original on 26 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. Dr. Radhanath Rath started his distinguished career in Journalism as Manager and Assistant Editor
  4. COUNCIL OF MINISTERS OF ODISHA (1937–2009)
  5. "Dr. Radhanath Rath: Doyen of Odisha journalism". odishatoday.com. Archived from the original on 17 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. Dr Rath was president of the Servants of the People Society of India for over a decade from May 1981. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Rediff on the NeT: Doyen of Orissa journalism passes away". rediff.co.in. 1998. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. His body was laid to rest with full state honours at Satyabadi near Puri
  7. "Orissa Sahitya Akademi". orissasahityaakademi.org. Archived from the original on 18 December 2010. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. Year-1967 26. Padmabhusan Radhanath Rath
  8. "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013. 19 Shri Radhanath Rath PB OR Litt. & Edu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாநாத்_ராத்&oldid=3544088" இலிருந்து மீள்விக்கப்பட்டது