உள்ளடக்கத்துக்குச் செல்

இராதாகாந்த தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் ராஜா ராதாகாந்தா தேவ் பகதூர் (Sir Raja Radhakanta Deb Bahadur) (1784 மார்ச், 10 –1867 ஏப்ரல் 19) இவர் ஓர் அறிஞரும் மற்றும் கொல்கத்தா பழமைவாத இந்து சமுதாயத்தின் தலைவராகவும் இருந்தார். சோவபசார் இராச்சியத்தின் மகாராஜா நவகிருட்டிண தேவின் வளர்ப்பு மகனும் வாரிசுமான கோபிமோகன் தேவின் மகனாவார். [1] [2]

பன்மொழி அறிஞர்

[தொகு]

ஒரு திறமையான அறிஞரான, இராதாகாந்த தேவ், சமசுகிருதம், பாரசீகம் மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் இவர், சமசுகிருத மொழி அகராதியான ஷப்தா கல்பத்ருமா என்பதை வெளியிட்டார். மற்றொரு சமகால சமசுகிருத அறிஞரும், தாகூர் குடும்பத்தின் வாரிசுமான ஹரகுமார் தாகூர் இவருக்கு ஷப்தா கல்பத்ருமாவைத் தொகுக்க உதவினார். [3] ஈசுவர் சந்திர குப்தாவின் செய்தித்தாளான சம்பத் பிரபாகர் என்ப்தில் கட்டுரைகளையும் இவர் எழுதினார். [4]

கல்விப்பணி

[தொகு]

இராதாகாந்தா தேவ் எப்போதுமே இந்துக்களிடையே கல்வியை, குறிப்பாக ஆங்கிலக் கல்வியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அக்கறை காட்டினார்; இவர் பெண் கல்வியையும் ஆதரித்தார். [2] இராதாகாந்தா தேவ் 1817 இல் கொல்கத்தா பள்ளிப் புத்தகச் சங்கம் மற்றும் 1818 இல் கொல்கத்தா பள்ளிச் சங்கத்தின் நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். இராதாகாந்தா 1818 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இந்தியச் வேளாண் மற்றும் தோட்டக்கலை சங்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். 1851ஆம் ஆண்டில் பிரிட்டிசு இந்திய சங்கத்தின் நிறுவனர்-தலைவராக இருந்தார். இவர் இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார். இவர் கொல்கத்தாவில் இந்துக் கல்லூரியை நிறுவ டேவிட் ஹரேக்கு உதவினார். [1]

பழமை வாதம்

[தொகு]

கல்விக்கான காரணத்திற்காக இவர் பங்களித்த போதிலும், அவர் சமூக பழமைவாதத்தின் பேரிலும் வலுவான ஆதரவாளராக இருந்தார். உடன்கட்டை ஏறல் தனது குடும்பத்தில் நடைமுறையில் இல்லை என்றாலும், அரசாங்கம் அதை ஒழிப்பதைப் பற்றி சிந்தித்தபோது இவர் அந்த வழக்கத்தை பாதுகாக்க முன்வந்தார். 1829 திசம்பரில் வில்லியம் பென்டிங்கு பிரபு இறுதியாக இவ்வழகத்தை ஒழித்தபோது, இராதகாந்தா தேவ், தனது பழமைவாத இந்து நண்பர்களுடன் சேர்ந்து, தர்மசபை (வரது தந்தை கோபி மோகன் தேவ் அவர்களால் நிறுவப்பட்டது) என்ற சமூகத்தின் தலைவராக இருந்தார். மேலும் இந்து சமூகத்தின் மரபுவழி பிரிவு சார்பாக தலைமை ஆளுநருக்கு ஒரு மனுவை வழங்குவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். [5]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Kunal Chakrabarti. Historical Dictionary of the Bengalis. Scarecrow Press. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-8024-5. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
  2. 2.0 2.1 AF Salahuddin Ahmed (2012). Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
  3. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p. 611
  4. Indrajit Chaudhuri (2012). "Sangbad Prabhakar". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  5. AF Salahuddin Ahmed. Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாகாந்த_தேவ்&oldid=2993047" இலிருந்து மீள்விக்கப்பட்டது