உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவ மருத்துவப் படைகள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவ மருத்துவப் படைகள்
இராணுவ மருத்துவப் படையின் சின்னம்
செயற் காலம்3 ஏப்ரல் 1764 - தற்போது வரை
நாடு இந்தியா
கிளை இந்தியத் தரைப்படை
சுருக்கப்பெயர்(கள்)AMC
குறிக்கோள்(கள்)அனைவரும் நோய் மற்றும் ஊனத்திலிருந்து விடுபடட்டும்[1]
ஆண்டு விழாக்கள்3 ஏப்ரல் (Raising Day)[2]
படைத்துறைச் சின்னங்கள்
கொடிஇந்திய இராணுவ மருத்துவப் படையின் கொடி
இந்திய இராணுவ மருத்துவப்படைகளின் இலச்சினை

இந்திய இராணுவ மருத்துப்படைகள் (Army Medical Corps) இந்திய இராணுவத்தில் சிறந்த மருத்துவர்கள் கொண்ட சிறப்பு மிக்க படையாகும். இந்தியாவின் முப்படையினருக்கும் மருத்துவச் சேவைகள் புரிவதே இதன் பணியாகும். இப்படையானது 70,000 மருத்துவர்களைக் கொண்டது.[3][4]3 ஏப்ரல் 1764 அன்று பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் இப்படை நிறுவப்பட்டது.

இந்திய இராணுவ மருத்துவப் படைகள்

[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ மருத்துவர்கள் சேவை வேகமாக வளர்ச்சியுற்றது. 3 ஏப்ரல் 1943 அன்று இந்திய இராணுவ மருத்துவப் படைகள் நிறுவப்பட்டது.[1] [5] இப்படையின் தலைமையிடமாக புனே நகரம் உள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் ஆயுதப் படைகளின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் பதவி 1949ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவர் தலைமையில் தரைப்படை, வான்படை மற்றும் கடற்படை இராணுவ மருத்துவச் சேவை படைகளின் இயக்குநர்கள், இராணுவப் பல் மருத்துவச் சேவைகளின் இயக்குநர் மற்றும் இராணுவச் செவிலியர் படைகளின் இயக்குநர்கள் இயங்குவர்.[3]

பயிற்சி

[தொகு]

இராணுவ மருத்துவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் இளநிலை மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவவர்களுக்கும் புனே இராணுவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்படும்.[3][6]

இதனையும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "ARMY MEDICAL CORPS CELEBRATES ITS 258TH RAISING DAY". 2022-04-03. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  2. "Army Medical Corps celebrates 260th Raising Day". 2024-04-03. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  3. 3.0 3.1 3.2 "Remodelling the medical corps". 2023-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  4. "Performance of Medical Establishments" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  5. "Formation of Indian Army Medical Corps". 1943-05-08. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
  6. "AFMC expected to get Institute of National Importance tag: DGAFMS". 2023-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.

வெளி இணைப்புகள்

[தொகு]

Official site [1]