உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவ அஞ்சல் சேவை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவ அஞ்சல் சேவை
Senā ḍāk sevā
துறை மேலோட்டம்
அமைப்பு1856 (1856) [1]
வகைஇராணுவம்
அஞ்சல் துறை
தலைமையகம்சேனா தாக் பவன்
குறிக்கோள்இந்தி Mel-milāp
தமிழ் : அஞ்சல் மூலம் ஒன்றிணைதல்
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • தலைமை இயக்குநர் (மேஜர் ஜெனரல்), கூடுதல் தலைமை இயக்குநர் (பிரிகேடியர்), இராணுவ அஞ்சல் சேவை [2]
மூல நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
மூல அமைப்புஇந்தியப் பாதுகாப்புப் படைகள்
வலைத்தளம்APS Indian Army
போர்க்கள அஞ்சல் நிலையத்தின் 150 ஆண்டுகால சேவையை முன்னிட்டு 2006ல் வெளியிட்ட அஞ்சல் தலைகள்
இராணுவ அஞ்சல் சேவையின் மத்திய மையத்தின் 75 ஆண்டு நிறைவை ஒட்டி 2023ல் வெளியிட்ட அஞ்சல் தலை

இந்திய இராணுவ அஞ்சல் சேவை (APS), இந்திய அரசின் அஞ்சல் துறையால் இயக்கப்படும் அமைப்பாகும். இராணுவ அஞ்சல் சேவையின் முதன்மைப் பணி, பாதுகாப்புப் படைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமைப்புக்கள்/பிரிவுகள்/துருப்புக்கள் தொடர்பான முகவரியின் பாதுகாப்பு வடிவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள இராணுவ முகாம்களுக்கு இடையே இராணுவ அஞ்சல் சேவையை மேற்கொள்வதாகும்.

சில சமயங்களில் போர் மண்டலத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த நாடு/ சொந்த ஊருக்கு இலவசமாக கடிதங்களை அனுப்பலாம். இராணுவ அஞ்சல் சேவைக்கான அதிகாரிகள் அஞ்சல் துறையிலிருந்து நியமிக்கப்படுகிறார்கள். இராணுவ தபால் சேவையில் மட்டுமே சிவில் சேவை அதிகாரிகளை ஆயுதப் படைகளில் பணியாற்றுவார்கள்.

செயல்பாடுகள்

[தொகு]

இராணுவ அஞ்சல் சேவை, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு 358 கள அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அஞ்சல் வசதிகள், வரைவோலைஅனுப்புதல், பணம் அனுப்பும் சேவைகள், செய்திப் பத்திரிக்கைகள், நிரந்தர ஆதார் பதிவு மைய வசதி ஆகியவற்றை வழங்குகிறது.வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளுடன் நிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்களுக்கு அஞ்சல் சேவை வழங்குகிறது.

நிறுவன அமைப்பு

[தொகு]

இராணுவ தபால் சேவையின் தலைமை இயக்குநராக மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள அதிகாரி உள்ளார். அவருக்கு உதவியாக துணை தலைமை இயக்குநர் பதவியில் பிரிகேடியர் தரத்தில் உள்ள அதிகாரி உள்ளார். தில்லி மற்றும் கொல்கத்தாவில் இரண்டு முதன்மை மத்திய தபால் நிலையங்களும் மற்றும் நாக்பூரில் உள்ள அஞ்சல் சேவை நிலையங்களுக்கு கர்னல் தரத்திலான அதிகாரிகள் தலைமையில் செயல்படுகிறது. எட்டு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அனைத்து அமைப்புகளையும் 96 FPOகளின் வலையமைப்பின் மூலம் உள்ளடக்கியது. 56 APO அதன் 262 FPOகளின் வலையமைப்பின் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "HISTORY APS". Indian Army. Government of India. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
  2. "Organisation". Indian Army. Govt. of India. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.