உள்ளடக்கத்துக்குச் செல்

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இது திருமலை நாயக்கர் மகாலில் இருந்து சில பகுதிகளை இடித்து திருச்சிராப்பள்ளிக்கு எடுத்துச் சென்று கட்டப்பட்ட கட்டம் ஆகும். பஞ்க்சகாலத்தில் மக்கள் மீது கூடுதல் வரி விதித்து தர்பார் மண்டபம் கட்டக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் என்ற என்னத்தில் திருமலை நாயக்கர் மகாலின் ஒரு பகுதியை இடித்துக் கொண்டுவந்து இந்த மர்பார்க கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.[1] இது திருச்சி மலைக்கோட்டைக்கு அண்மையில் உள்ளது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இது நகர மண்டப நிர்வாகத்தினர் கூடுவதற்கான மண்டபமாகச் செயற்பட்டது.[2] 1999 ஆம் ஆண்டில் இது இந்திய அருங்காட்சியகத் துறையால் கையகப்படுத்தப்பட்டது.[3] இங்கே தற்போது அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. வினு (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். pp. 179–180.
  2. Testimony to Rich Past
  3. Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.159

படங்கள்

[தொகு]