இராணி சென்னம்மா பல்கலைக்கழகம்
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2010 |
வேந்தர் | வாஜுபாய் வாலா[1] |
துணை வேந்தர் | எம். ராமச்சந்திர கெளடா[2] |
அமைவிடம் | |
வளாகம் | கிராமம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | rcub.ac.in |
இராணி சென்னம்மா பல்கலைக்கழகம் (Rani Channamma University)[3][4] என்பது இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெல்காமில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது 2010ஆம் ஆண்டு கர்நாடக அரசால் நிறுவப்பட்டது. இது 1982ஆம் ஆண்டு தார்வாடில் கர்நாடக பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட பெல்காமில் உள்ள கித்தூர் இராணி சென்னம்மா முதுநிலை மையத்தை மேம்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டது.[5] இராணி சென்னம்மா பல்கலைக்கழகம் கர்நாடகாவின் கித்தூர் சமஸ்தானத்தின் இராணியான கிட்டூர் ராணி சென்னம்மாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம், நல்ல கல்வி வசதிகள் இல்லாத வட கர்நாடகா பகுதி மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.[5] இந்தப் பல்கலைக்கழகம் புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 4க்கு அருகில் பூதாரமனஹட்டியில் 172 ஏக்கர் நிலப்பரப்பில் "வித்யசங்கமா" என்ற முதன்மை வளாகத்தில் அமைந்துள்ளது. இது பெல்காம் நகரிலிருந்து 18 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது பெல்காம், பிஜாப்பூர் மற்றும் பாகல்கோட் மாவட்டங்களின் அதிகார வரம்பில் செயல்பட்டு வருகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chancellor - RCUB". 25 November 2012. Archived from the original on 9 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vice Chancellor - RCUB". 25 November 2012. Archived from the original on 14 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-06-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
- ↑ http://dpal.kar.nic.in/ao2010%5C30of2010(E).pdf
- ↑ 5.0 5.1 5.2 "Rani Channamma University, Belagavi". rcub.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-27.