இராணியின் பலியாட்டம் ஏற்பு (Queen's Gambit Accepted) எனும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் பின்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கின்றது.[1][2][3]
1 d4 d5
2 c4 dxc4
வெள்ளையின் இரண்டாவது c4 நகர்வுக்கு பதிலளிக்க கருப்புக்கான நகர்த்தல் பின்வருமாறு வரிசைப்படுத்தப்படுகிறது. முதல் தெரிவு 2...e6. இந்நகர்வு இராணியின் பலியாட்டம் மறுப்பு என்ற தொடக்கமாகும். இரண்டாவது தெரிவு 2...c6. இந்நகர்வு சிலாவ் தடுப்பாட்டம் என்ற தொடக்கமாகும். மூன்றாவது தெரிவான 2...dxc4. இந்நகர்வுதான் இராணியின் பலியாட்டம் ஏற்பு என்ற தொடக்கத்தை அடையாளப்படுத்துகிறது.
இதை உண்மையான ஒரு பலியாட்டமாகக் கூற முடியாது ஏனெனில் இழந்த காயிற்கு மாற்றீட்டாக வெள்ளை ஒரு காயைப் கைப்பற்றும் அல்லது கறுப்பு இழப்பின்றிக் காயைக் காப்பாற்ற இயலாது.