உள்ளடக்கத்துக்குச் செல்

இராட்சத எரிமலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராட்சத எரிமலைகள் என்பது எரிமலைகளில் பெரியனவும் சக்தியில் அளவிட முடியாதவையும் ஆகும். எடுத்துகாட்டாக இதன் வெடிப்பு குறைந்தது 1000 கன கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும். வரலாற்றில் இதுவரை வெடித்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளிலேயே பெரிய கொந்தளிப்பையும் விட ஆயிரமாயிரம் மடங்கு இது பெரிய அளவில் சக்தியை வெளிப்படுத்த வல்லது. இந்த ராட்சத எரிமலைகள் என்பது புவியின் மைய கருவிலிருந்து மக்மா எனப்படும் எரிமலை கற்குழம்பானது பூமியின் மேல் அடுக்கு தகடின் அண்மைய வரையிலும் விரவி வரக்கூடியது. ஆனால் இந்த எரிமலைக்குழம்பினால் பூமியின் வெளி அடுக்கை பிளந்து வெளிவர இயலாது. எனவே இது வெளி அடுக்கின் அடியில் கிடைவாக்கில் பரவுகிறது. இதன் காரணமாக வெளி அடுக்கின் அடியில் இந்த மக்மாவின் அழுத்தம் பூமியின் மேலோடு தகர்க்கப்படும் வரை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் பூமியின் மேலோட்டில் இலகுவான இடங்களில் இந்த அழுத்தம் அனைத்தும் ஒரே புள்ளியில் குவியும். இவ்வாறு குவியும் முன் பரவி இருந்த இந்த மக்மாவானது மேலோட்டின் கீழாக ஒரு தனி அடுக்காக வளரும் (எ.கா: டோபா) மேலும் அவ்வாறு வளர்ந்த அடுக்கின் அழுத்தத்தின் குவியம் பூமியின் வெளிப்பரப்பிற்கு மிக அருகில் மையம் கொள்ளும் (எ.கா: யெல்லோஸ்டோன்_தேசியப்_பூங்கா|யெல்லோஸ்டோன்).

தி டிஸ்கவரி சேனல் என்கிற செய்மதி தொலைகாட்சியானது உலகில் இதுவரை கீழ்க்கண்ட ஆறு ராட்சத எரிமலைகளை பற்றிய செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி தொகுப்பு இவை அனைத்தும் நமக்கு தெரிந்த நான்கிணைய ராட்சத எரிமலைகளாகும். இன்னும் கண்டறியப்படாமல் நிறைய இருக்கலாம் என்கிறது. இந்த ராட்சத எரிமலை குமுறல்களானது லாவா எனப்படும் எரிமலைக்குழம்புகளாலும் எரிமலைச்சாம்பலாலும் நிலப்பரப்பின் பெரும்பகுதியை கவரவல்லது. மேலும் இவை பெரிய அளவில் பனியுகம் போன்ற பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. இது பூமியில் உயிர்களனைத்திர்க்கும் அழிவினை உருவாக்க கூடியவையாகும்.

பெயர்க்காரணம்

[தொகு]

சூப்பர் வல்கனோ (SUPERVOLCANO) என்கிற வார்த்தை முதன் முதலில் பிபிசி என்கிற ஐக்கிய ராச்சியத்தில் இயங்கும் ஊடகத்தின் பாபுலர் சயின்ஸ் என்கிற ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் . இந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக பொதுமக்களுக்கு பெரிய அளவிலான எரிமலை பெருவைகள் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. எரிமலை ஆய்வாளர்களும் புவியியல் ஆராய்ச்சியாளர்களும் இந்த "SUPERVOLCANOES" என்கிற வார்த்தையினை அவர்களின் துறைகளில் பயன்படுத்துவதில்லை. இன்றும் இது ஒரு பொதுவான வார்த்தையாக மட்டுமே இருக்கிறது. இந்த வார்த்தையானது இன்றும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விதமான புவி தட்ப வெப்ப நிலைகளில் பயன்படுத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் இந்த வார்த்தை தோழில் நெறிஞர்களால் மக்களிடையே பேசப்படும் பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. MEGACALEDERA என்கிற மிகப்பெரிய எரிமலைபெருவாய் என்ற பொருள்படும் வார்த்தை பெரும்பாலும் இந்த ராட்சத எரிமலைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் இன்றுவரை யாரும் இந்தவகை எரிமலைகளின் வெடிப்பு சக்தியை துல்லியமாக அளவிட்டு கூறியதில்லை. இவ்வகை பெரிய எரிமலை வெடிப்பானது 'பெருவெடிப்பு பாறை மாகாணங்கள்' (Large Igneous Provinces) மற்றும் 'பிரமாண்ட எரிமலை குமுறல்'கள் (Massive Eruptions) என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

பெருவெடிப்பு பாறை மாகாணங்கள்

[தொகு]

ஐஸ்லாந்து, சைபீரியன் பகுதி, தக்காண பகுதி, மற்றும் ஒன்டோங் ஜாவா பீடபூமி போன்ற எரிமலை வெடிப்பினால் வெளிவந்த Besalt என்றழைக்கப்படும் பாறைகளாலான நிலபரப்பு பெருவெடிப்பு பாறை மாகணங்களில் அடங்க கூடிய சில பகுதிகளாகும். இது போன்ற எரிமலைக்குழம்பாலான பீடபூமிகள் பெரும்பாலும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலபரப்பின் மீது லாவா என்கிற எரிமலைக்குழம்பு வழிந்தோடியதன் காரணமாக உருவாகி இருக்கலாம் என்று கருதபடுகின்றது. மேற்கு மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமி பகுதியில் இருந்த சிறு சிறு எரிமலை குவியங்கள் ஒன்றிணைந்து 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு இங்கு இந்த அடுக்கு எரிமலை பதிவுகளை உருவாக்கியுள்ளன. இது போன்ற சைபீரியன் ட்ராப்ஸ் பகுதிகளிலும் இந்த எரிமலை வாயின் சுவடுகள் அறியப்பட்டுள்ளன. இந்த சைபீரியன் ட்ராப்ஸ் பகுதிகளில் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டுள்ளது அதுவே பேர்மியன் காலத்திற்கு முடிவாகவும் அமைந்துள்ளது. அதே போல 65 மில்லியன் ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட மற்றொரு இரண்டாவது பெருவெடிப்பு கிரீத்தேசியக் காலத்தின் முடிவாக அமைந்துள்ள்ளது. மேலும் இந்த பகுதிகளில் எரிமலை குமுறல்களை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வெடிப்புகள் எதிர்காலத்தில் ராட்சத எரிமலைகள் வெடிக்கும் பட்சத்தில் இவையும் சேர்ந்து வெடிக்கும என்பதை பற்றியும் ஆராயப்படுகிறது. இதுபோன்ற பெரிய வகை குமுறல்கள் கடைசியாக 1783-84 ஆண்டுவாக்கில் ஐஸ்லாந்தில் உள்ள லாக்கி எரிமலையில் நடந்திருகின்றது. இது தோராயமாக நாற்பது கிலோமீட்டர் நீளமானதாகவும் 14 கன கிலோமீட்டர் அளவிற்கு எரிமலைக்குழம்பை கக்கியதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒன்டோங் ஜாவா பீடபூமியானது தற்போது 2 மில்லியன் சதுரகிலோமீட்டர்களுக்கு பரந்து விரிந்துள்ளது.

பிரமாண்ட எரிமலை குமுறல்

[தொகு]

எரிமலை வெடிப்பு தொகுதி அளவீட்டின் அலகு VEI- Volcanic Explosivity Index ஆகும். இந்த அளவீடின்படிக்கு எரிமலை வெடிப்பின் வீரியம் அளவுகோளிடப்படுகிறது. இதில் VEI8-ற்கு மேலாக பதிவாகும் எரிமலை குமுறல்கள் இந்த வகையில் அடக்கப்படுகின்றன. இவை போன்ற பெரிய நிகழ்வுகளில் எரிமலை வெடிப்புகள் குறைந்தது 1000 கன கிலோமீட்டர்களை உள்ளடக்கும். அதே போல் VEI7 100 கன கிலோமீட்டர்களை பாதிக்கும் என்றும் அலகிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராட்சத_எரிமலைகள்&oldid=2745093" இலிருந்து மீள்விக்கப்பட்டது