இராஜ்யசிறீ குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்யசிறீ குமாரி
பிறப்பு4 சூன் 1953 (1953-06-04) (அகவை 69)
பிகானேர், ராஜஸ்தான், இந்தியா
பெற்றோர்கர்னி சிங்
சுசீலா குமாரி

இராஜ்யசிறீ குமாரி (Rajyashree Kumari) (பிறப்பு: ஜூன் 4, 1953) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். இவரது 16 வயதில் துப்பாக்கி சுடுதலுக்காக 1968-இல் இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது, [1] இவர் பிகானேர் இராச்சியத்தின் மகாராஜா டாக்டர் கர்னி சிங் என்பவருக்கும் அவரது மனைவி மகாராணி சுசீலா என்பருக்கும் மகளாவார்.

இவர் தற்போது  மகாராஜா கங்கா சிங் அறக்கட்டளையின் தலைவரும் இலால்கர் அரண்மனையின் உரிமையாளரும் ஆவார்.[2] இராஜ்யசிறீ பிகானேரில் பல தொண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இவருக்கு அனுபமா குமாரி என்ற ஒரு மகளும், சஜ்ஜன் சின் என்ற மகனும் உள்ளனர்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "LIST OF ARJUNA AWARD WINNERS". 25 December 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. Rathore, Abhinay. "Bikaner (Princely State)". Rajput Provinces of India (ஆங்கிலம்). 2022-03-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "GENEALOGICAL TREE OF THE HOUSE OF BIKANER". rajyashreebikaner.com. 2022-03-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்யசிறீ_குமாரி&oldid=3530839" இருந்து மீள்விக்கப்பட்டது