உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்குமார் ரோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்குமார் ரோத்
2021-ல் இராஜ்குமார் ரோத்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்கனக் மால் கத்ரா
தொகுதிபன்சுவாரா
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
2018 – சூன் 2024
முன்னையவர்சுசீல் கத்ரா
பின்னவர்அணில் குமார் கத்ரா
தொகுதிஷொராசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூன் 1992 (1992-06-26) (அகவை 33)
துங்கர்பூர், இராசத்தான், India
அரசியல் கட்சிபாரத் ஆதிவாசி கட்சி (2023–present)
பாரதிய பழங்குடியினர் கட்சி (2018–2023)
துணைவர்
கீதா (தி. 2021)
பிள்ளைகள்1
முன்னாள் மாணவர்
பணிஅரசியல்வாதி

இராஜ்குமார் ரோத் (Rajkumar Roat-பிறப்பு சூன் 26,1992) என்பவர் இராசத்தான் மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பன்சுவாரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் சோரசி தொகுதியிலிருந்து இரண்டு முறை இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் பாரத் ஆதிவாசி கட்சியின் நிறுவனர் ஆவார்.[1][2]

இளமை

[தொகு]

இராஜ்குமார் ரோத் 1992 சூன் 26 அன்று இராசத்தானின் துங்கர்பூரில் பிறந்தார். இவர் ஆதிவாசி பில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.[3] மோகன்லால் சுகடியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலை பட்டம் பெற்றார். பின்னர் இவர் இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார் [4][5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2018ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ரோத் இளைய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பி. டி. பி. கட்சி சார்பில் சோரசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[6] இவர் இராசத்தான் சட்டமன்றத்தில் பல பதவிகளை வகித்துள்ளார். மாநிலத்தின் ஆளுகை மற்றும் சட்டமன்ற செயல்முறைகளுக்கு பங்களித்துள்ளார்.[7]

16ஆவது இராசத்தான் சட்டசபை உறுப்பினராக, 2023இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024இல் இரண்டு குழுக்களுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்பு, 15ஆவது இராசத்தான் சட்டசபையில், ரோட் 2018 முதல் 2023 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், 2021 முதல் 2022 வரை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் குறித்த குழுவில் உறுப்பினராக இருந்தார். கூடுதலாக, 2019 முதல் 2022 வரை, பழங்குடியினர் நலக் குழுவிலும் பணியாற்றினார்.[8][9]

2024 பொதுத் தேர்தலில், ரோத் பன்சுவாரா மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் மகேந்திரஜீத் சிங் மால்வியாவை 2,47,054 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan Polls: Bharat Adivasi Party Candidate Rajkumar Roat Wins Chorasi". Zee News (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
  2. "न बीजेपी न कांग्रेस, इस पार्टी के खाते में आई विधानसभा चुनाव की पहली जीत". आज तक (in இந்தி). 2023-12-03. Retrieved 2024-06-05.
  3. . 
  4. "Rajasthan Election Results 2018: 1 in 3 elected MLAs have never been to college". EdexLive (in ஆங்கிலம்). 2018-12-12. Retrieved 2024-06-12.
  5. https://assembly.rajasthan.gov.in/Attachments/PDF/16Affidavits/127.pdfAffidavit : (as submitted to the Returning Officer) (PDF), p. 13, archived from the original (PDF) on 12 June 2024
  6. . 
  7. "16th House - Constituency Representation (sr. no. 81)". assembly.rajasthan.gov.in.
  8. "16th House - Constituency Representation (sr. no. 81)". assembly.rajasthan.gov.in.
  9. "List of Committees - Rajasthan Legislative Assembly". assembly.rajasthan.gov.in.
  10. उदयपुर, विपिन चंद्र सोलंकी (2024-06-05). "रोत ने BJP के दिग्गज को हराकर बदली वागड़ की सियासत, जानें- कैसा चला वोटर्स पर उनका जादू?". www.abplive.com (in இந்தி). Retrieved 2024-06-05.
  11. "Banswara, Rajasthan Lok Sabha Election Results 2024 Highlights: Banswara लोकसभा सीट पर कौन जीता? किसे मिले कितने वोट, यहां जानिए Result". आज तक (in இந்தி). 2024-06-04. Retrieved 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்குமார்_ரோத்&oldid=4369720" இலிருந்து மீள்விக்கப்பட்டது