இராஜ்கர், ராஜஸ்தான்
இராஜ்கர் இராஜ்கர், சாதுல்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°38′N 75°23′E / 28.64°N 75.38°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ராஜஸ்தான் |
மாவட்டம் | சூரு |
நிறுவப்பட்டது | 1804 |
அரசு | |
• வகை | கூட்டாட்சி குடியரசு |
• நிர்வாகம் | இந்திய அரசு |
• நாடாளுமன்ற உறுப்பினர் | இராகுல் கச்வான் |
• சட்டப் பேரவை உறுப்பினர் | திருமதி. கிருஷ்ணா பூனியா |
ஏற்றம் | 479 m (1,572 ft) |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 1,84,000 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 331023 |
அஞ்சல் குறியீட்டு எண் | 01559 |
வாகனப் பதிவு | RJ10 |
ஔருகிலுள்ள நகரம் | ஹிசார், பிவானி, ரேவாரி (அரியானா); சிகர், பிலானி, செய்ப்பூர் (ராஜஸ்தான்); புது தில்லி |
மக்களவை தேர்தல் தொகுதி | சூரூ |
மாநிலச் சட்டப் பேரவைதேர்தல் தொகுதி | இராஜ்கர், ராஜஸ்தான் |
இராஜ்கர் (Rajgarh) என்பது இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கு பகுதியின் சூரூ மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் வட்டமாகும். இராஜ்கரில் உள்ள இரயில் நிலையம் சாதுல்பூர் என்று அழைக்கப்படுகிறது. இராஜ்கரை ஒத்த பெயர்களைக் கொண்ட இடங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக, சாதுல்பூர் சமீபத்திய காலங்களில் நகரத்தின் பெயருக்கு ஒத்ததாக மாறிவிட்டது. இது அரியானா எல்லைக்கு அருகில் உள்ளது.
விளக்கம்[தொகு]
இராஜ்கர், ராஜ்கர் ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் லட்சுமி நிவாஸ் மித்தல் மற்றும் பொருளாதார நிபுணரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான பிமல் ஜலான் ஆகியோரின் பிறப்பிடமாகும். [1] பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா ஒலிம்பிக் வீரரும் மற்றும் சாதுல்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான பத்மசிறி கிருட்டிணா பூனியா ஆகியோரும் இந்த ஊரைச் சேர்ந்த சில குறிப்பிடத்தகுந்தவர்கள்.
கண்ணோட்டம்[தொகு]
இராஜ்கர் என்பது ராஜஸ்தானின் சூரூ மாவட்டத்தில் உள்ள நகராட்சி நகரமாகும். இராஜ்கர் நகரம் 40 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தியாவின் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி இராஜ்கர் நகராட்சியில் 59,193 பேர் என்ற அளவில் இருக்கின்றனர். இதில் 30,710 ஆண்களும் மற்றும் 28,483 பெண்களும் உள்ளனர்.
0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 8122 ஆகும். இது இராஜ்கரின் மொத்த மக்கள் தொகையில் 13.72% ஆகும். இராஜ்கர் நகராட்சியில், பெண் பாலியல் விகிதம் மாநில சராசரியான 928 க்கு எதிராக 927 ஆகும். மேலும், மாநில சராசரியான 888 உடன் ஒப்பிடும்போது இராஜ்கரில் குழந்தை பாலியல் விகிதம் 880 ஆகும். இராஜ்கர் நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 66.11% ஐ விட 72.72% அதிகமாகும். இராஜ்கரில், ஆண்களின் கல்வியறிவு 83.30% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 61.41% ஆகவும் உள்ளது.
வரலாறு[தொகு]
செகாவதியைச் சேர்ந்த மகாராஜா முதலாம் இராஜ் சிங் என்பவரின் பெயரால் இராஜ்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சோங்கரர்கள் (ராஜ்புத்திரர்கள்) ஆட்சி செய்த செகாவதியின் ஒரு பகுதியாகும்.
இராஜ் கோட்டை 1806 ஆம் ஆண்டில் செகாவதியைச் சேர்ந்த மகாராஜா முதலாம் இராஜ் சிங் என்பவரால் கட்டப்பட்டது. பெரும்பாலான முஸ்லிம்கள் நர்காரிலிருந்து இங்கு குடிபெயர்ந்து கோட்டையைக் கட்டும் பணியை மேற்பார்வையிட்டனர்; அவர்கள் உள்ளூர் பழங்குடியினருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்தனர். உள்ளூர் பழங்குடியினர் கோட்டை கட்டுவதற்கு ஆதரவாக இல்லை. இந்த துணிச்சலான வெற்றியில் செகாவதி ஆட்சியாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
நிலவியல்[தொகு]
இராஜ்கரில் 28°22′N 75°14′E / 28.36°N 75.24°E அமைந்துள்ளது. [2] சாதுல்பூர் இரயில் நிலையம் 239 மீட்டர்கள் (784 அடி) ) உயரத்தில் உள்ளது .
காலநிலை[தொகு]
இப்பகுதியில் குளிர்காலத்தில் உறைபனியில் ஆரம்பித்து படிப்படியாக கோடைகாலத்தில் 50 ° C வெப்பநிலை வரை உயரும். சூரூ மாவட்டமும் நாட்டின் வெப்பமான மண்டலமாகும்.