இராஜேஸ்வரி சுந்தர் ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராஜேஸ்வரி சுந்தர் ராஜன்
பிறப்பு1950
மும்பை, இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம், ஜியார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம்
பணிஆங்கிலப் பேராசிரியர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர்

இராஜேஸ்வரி சுந்தர் ராஜன் (Rajeswari Sunder Rajan) (பிறப்பு 1950) ஒரு இந்திய பெண்ணிய அறிஞரும், ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார். பெண்ணியம் மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது ஆராய்ச்சி ஆர்வம் காலனித்துவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்கள், இந்திய ஆங்கில எழுத்து, தெற்காசியா தொடர்பான பாலினமும் கலாச்சார பிரச்சினைகளும், விக்டோரியா சகாப்தத்தின் ஆங்கில இலக்கியம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. "தற்கால இந்திய பெண்ணியத்தில் சிக்கல்கள்", "சைன் போஸ்ட்: சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் பாலின சிக்கல்கள்" போன்றத் தொடரையும் வெளியிட்ட்டுள்ளார். இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். [1][2]

சுயசரிதை[தொகு]

இராஜேஸ்வரி முபையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் 1969இல் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், 1971இல் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர், வாசிங்டன், டி. சி. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1]

இந்தியாவில் சிலகாலம் விரிவுரையாளராக பணிபுரிந்த பின்னர் இவர் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் வொல்ப்சன் கல்லூரியில் கூட்டாளராக இருந்தார். பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் வாசிப்பவராக பணியாற்றினார். புதுதில்லியின், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திலும் , மகளிர் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்திலும் மூத்த கூட்டாளராக இவர் இருந்தார். ஒகையோ ஓபர்லின் கல்லூரியில் ஷான்சி வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [3]

வெளியீடுகள்[தொகு]

 • The Lie of the land: English literary studies in India (1992)
 • The Prostitution Question(s): (female) Agency, Sexuality and Work (1996)
 • Is the Hindu Goddess a Feminist? (1997)
 • Signposts: Gender Issues in Post-independence India (1999)
 • Real and Imagined Women: Gender, Culture and Postcolonialism (2003)
 • The Scandal of the State: Women, Law, and Citizenship in India (2003)
 • The Postcolonial Jane Austen (with You-Me Park) (2015)[3]
 • Commodities and Culture in the Colonial World, co-ed with Supriya Chaudhuri, Josephine McDonagh, and Brian Murray, London and New York, Routledge, 2017

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Rajeswari Sunder Rajan:Global Distinguished Professor of English". New York University. பார்த்த நாள் 9 March 2016.
 2. "Rajeswari Sunder Rajan". Womenunlimited.net. பார்த்த நாள் 13 March 2016.
 3. 3.0 3.1 "Rajeswari Sunder Rajan, Global Distinguished Professor of English". New York University. பார்த்த நாள் 9 March 2016.