இராஜேஷ் தல்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேஷ் தல்வார்
படித்த கல்வி நிறுவனங்கள்நாட்டிங்காம் பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர்,[1] வழக்கறிஞர்[2]
வலைத்தளம்
rajeshtalwar.com

இராஜேஷ் தல்வார் (Rajesh Talwar), is a lawyer and writer from இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் வழக்கறிஞருமாவார். இவர், சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[1][3]

ஆரம்பகால வாழ்க்கை:[தொகு]

1996 பிரித்தானிய உதவித்தொகை பெற்று ஐக்கிய இராச்சியம் சென்ற தல்வார், நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மனித உரிமைகள் சட்டத்தில் பட்டம் (LLM) பெற்றார். இவர் சட்டம் மற்றும் மனித உரிமை சார்ந்த தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அரசு நிர்வாகத்திற்கான ஹார்வார்ட் கென்னடி பள்ளியின் பேச்சுவார்த்தைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.[4] இதழியலுக்காக இலண்டன் பள்ளியில் முதுகலை பட்டத்தைப் பெற்றார். ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கொசோவோ, ஆப்கானித்தான், கிழக்குத் திமோர், சோமாலியா, லைபீரியா ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபைக்காகப் பணியாற்றினார்.

பணி[தொகு]

தல்வார் சட்டத்துறையில் பேராசிரியராக மட்டுமின்றி வழக்குறைஞராகவும் பணியாற்றுகிறார். தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இசுலாமியாவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஷ்_தல்வார்&oldid=3580968" இலிருந்து மீள்விக்கப்பட்டது