உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேஷ்
Rajesh
பிறப்புஇராஜஷ் வில்லியம்ஸ்[1]
20 திசம்பர் 1949 (1949-12-20) (அகவை 74)
அணைக்காடு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1974 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஜோன் சிலிவியா
(தி.1983; 2012 இறப்பு)
பிள்ளைகள்2

இராஜேஷ் (Rajesh) தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கும் ஒரு இந்திய நடிகராவார். திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ள இவர், 150இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.[2] கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இராஜேஷ் 1949 இல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வில்லியம்சு நாட்டார், இலில்லி கிரேசு மண்கொண்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஆனால் இவரது குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அணைக்காடு பகுதியைச் சேர்ந்தது.[3] திண்டுக்கல், வடமதுரை, மேலநாதம் அணைக்காடு, சின்னமனூர் தேனி மாவட்டங்களில் படித்தார்.[4] காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் எதிர்பாராத நிலையில் தனது கல்லூரிக் கல்வியை முடிக்கவில்லை. புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2]

1974 இல், இவருக்கு அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் அதில் ஒரு சிறிய பாத்திரத்தை மட்டுமே நடித்தார்.[2] கதாநாயகனாக இவரது முதற் படம் இராஜ்கண்ணு தயாரித்த கன்னிப்பருவத்திலே (1979).[3] கே. பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தில் ராஜேஷ் நடித்தார். பின்னர், இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கமலகாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் நடித்தார்.

இப்போது இவர் உணவகம் நடத்துதல், வீடு நிலம் வாங்கி விற்கும் வணிகத்தில் உள்ளார். இவர் நகரத்தில் ஒரு முன்னணி கட்டுமானர் ஆவார்.[2] ஆங்கிலத் திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் எழுதினார்.

இவர் ஒரு கிறிஸ்தவர், பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக இருந்தார். பின்னர் இவர் சோதிடத்தில் ஈடுபட்டார். சோதிடம் குறித்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1983 இல், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் திராவிடத் தலைவருமான பட்டுக்கோட்டை தாவிசு வனத்திராயரின் பேத்தியான ஜோன் சிலிவியா வனத்திராயரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற ஒரு மகளும், தீபக் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் 2014 இல் அறிமுகமானார்.[5][6] இராஜேசின் மனைவி 2012 ஆகத்து 6 அன்று இறந்தார்.[7]

1985 இல் சென்னை கே. கே. நகர் அருகே திரைப்பட படப்பிடிப்புக்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் ஆவார். இது அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.[8] அந்த வீட்டில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. பின்னர் 1993 இல் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கியபோது அதை விற்றார். 90களின் முற்பகுதியில், இவரது நண்பர் ஜேப்பியார் அறிவுறுத்தியபடி, இவர் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார். பின்னர் இவர் உணவகத்தையும், கட்டுமான வணிகத்தையும் தொடங்கினார். 1987 முதல் 1991 வரை வி. என். ஜானகியை ஆதரித்து அரசியலில் தீவிரமாக இருந்தார். இவர் கார்ல் மார்க்சின் ஆதரவாளரும் ஆவார். இவர் இங்கிலாந்து சென்று மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  1. 18 வயசு புயலே
  2. அச்சமில்லை அச்சமில்லை
  3. அந்த 7 நாட்கள்
  4. அருவா வேலு
  5. அலை பாயும் நெஞ்சங்கள்
  6. அவள் ஒரு தொடர்கதை
  7. அவள் போட்ட கோலம்
  8. அறை எண் 305ல் கடவுள்
  9. அனல் காற்று
  10. ஆட்டோகிராப்
  11. ஆயுதம்
  12. ஆலய தீபம்
  13. ஆறுமனமே
  14. இது எங்கள் ராஜ்யம்
  15. இராவணன்
  16. இலங்கேஸ்வரன்
  17. உத்தமி
  18. உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
  19. என் உயிர் நீதானே
  20. ஒரு கல் ஒரு கண்ணாடி
  21. கண்ணும் கண்ணும்
  22. கன்னிப்பருவத்திலே
  23. காத்திருக்க நேரமில்லை
  24. காதலர் கதை
  25. காவலுக்குக் கெட்டிக்காரன்
  26. காளி கோயில் கபாலி
  27. காற்றுள்ளவரை
  28. குடும்ப சங்கிலி
  29. குழந்தை ஏசு
  30. கொலுசு
  31. சங்கநாதம்
  32. சட்டத்தின் திறப்பு விழா
  33. சத்திரபதி
  34. சத்யா
  35. சந்தோஷக் கனவுகள்
  36. சர்வம் சக்திமயம்
  37. சித்திரமே சித்திரமே
  38. சித்து +2
  39. சிந்தாமல் சிதறாமல்
  40. சிறை
  41. சிறையில் பூத்த சின்ன மலர்
  42. சின்ன ஜமீன்
  43. செயின் ஜெயபால்
  44. தம்பி பொண்டாட்டி
  45. தர்மதேவன்
  46. தர்மபுரி
  47. தனிக்காட்டு ராஜா
  48. தனிமரம்
  49. தாமரை
  50. தாய் வீடு
  51. தாலி புதுசு
  52. திருடன் போலீஸ்
  53. திருப்பதி
  54. தீண்ட தீண்ட
  55. தீனா
  56. துணிவே தோழன்
  57. தைப்பொங்கல்
  58. நல்ல காலம் பொறந்தாச்சு
  59. நான் நானே தான்
  60. நிலவே மலரே
  61. நினைத்து நினைத்துப் பார்த்தேன்
  62. பதவி படுத்தும் பாடு
  63. பரசுராம்
  64. பரமசிவன்
  65. புதுப்புது ராகங்கள்
  66. பெண்புத்தி முன்புத்தி
  67. பொங்கலோ பொங்கல்
  68. மகாநதி
  69. மண்ணுக்குள் வைரம்
  70. மண்ணைத் தொட்டு கும்பிடணும்
  71. மயில்
  72. மனக்கணக்கு
  73. மானஸ்தன்
  74. முடிவல்ல ஆரம்பம்
  75. முதல் சீதனம்
  76. மெட்டி
  77. மேல்மருவத்தூர் அற்புதங்கள்
  78. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
  79. யாரோ எழுதிய கவிதை
  80. யானை
  81. ரமணா
  82. ராஜாத்தி ரோஜாக்கிளி
  83. லவ் சேனல்
  84. வரலாறு
  85. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  86. வல்லவன் வருகிறான்
  87. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
  88. வானமே எல்லை
  89. விருமாண்டி
  90. வெளிச்சத்துக்கு வாங்க
  91. வேலி
  92. ஜன்னல் ஓரம்
  93. ஜி
  94. ஜெய்ஹிந்த்

பின்னணிக் குரல் கலைஞராக

[தொகு]
நடிகர் திரைப்படம் குறிப்புகள்
முரளி டும் டும் டும் (2001),
ஜூட் (2003),
மஜா (2005),
உள்ளம் கேட்குமே (2005),
ராம் (2005)
[9]
நெடுமுடி வேணு பொய் சொல்லப் போறோம் (2008) [9]

தொலைக்காட்சிகளில்

[தொகு]
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் தொலைக்காட்சி மொழி
2000 சிறு தொடர்கள்-அழுக்கு வேட்டி ராஜ் தொலைக்காட்சி தமிழ்
சிறு தொடர்கள்-சவுக்கடி
2001–2003 அலைகள் கிருஷ்ணா சன் தொலைக்காட்சி
2004–2006 கணவருக்காக
2005 சுவாமி ஐயப்பன் ஏசியாநெட் மலையாளம்
2012 ஆண்பாவம் கோபாலசாமி சன் தொலைக்காட்சி தமிழ்
2013 தாயம் கலைஞர் தொலைக்காட்சி
2014 முடிவில்லா ஆரம்பம் வேந்தர் தொலைக்காட்சி
[அக்கா ஜெயா தொலைக்காட்சி
2015–2016 களத்து வீடு விஜய் தொலைக்காட்சி
2018–2022 ரோஜா டைகர் மாணிக்கம் சன் தொலைக்காட்சி
2020 சூர்யவம்சம் செல்வகணபதி (சிறப்புத் தோற்றம்) ஜீ தமிழ்
பூவே உனக்காக டைகர் மாணிக்கம் (சிறப்புத் தோற்றம்) சன் தொலைக்காட்சி
2021 சில்லுனு ஒரு காதல் சிவராமன் சமீந்தார் (சிறப்புத் தோற்றம்) கலர்சு தமிழ் தொலைக்காட்சி
2022 கனா காணும் காலங்கள் சக்திவேல் ஹாட் ஸ்டார்
2022–தற்போது கார்த்திகை தீபம் தர்மலிங்கம் ஜீ தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Merry Christmas': Katrina Kaif, Vijay Sethupathi's film pushed to January 2024". தி இந்து. November 16, 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 "Tamil Nadu News : From schoolteacher to character artiste". 2006-08-29 இம் மூலத்தில் இருந்து 2006-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060901112502/http://www.hindu.com/2006/08/29/stories/2006082905050200.htm. "Tamil Nadu News : From schoolteacher to character artiste".
  3. 3.0 3.1 "ஆசிரியராக இருந்து நடிகரான ராஜேஷ்: 'கன்னிப் பருவத்திலே' படத்தின் கதாநாயகன் ஆனார்" [Teacher-turned-actor Rajesh: Became lead actor with 'Kanni Paruvathile']. Maalai Malar. June 13, 2012. Archived from the original on 20 June 2012."ஆசிரியராக இருந்து நடிகரான ராஜேஷ்: 'கன்னிப் பருவத்திலே' படத்தின் கதாநாயகன் ஆனார்" [Teacher-turned-actor Rajesh: Became lead actor with 'Kanni Paruvathile'].
  4. "சிறை தந்த சிறந்த நடிகர்". கல்கி. 3 February 1985. pp. 24–27.
  5. "Wedding Bells At This Actor's House - Rajesh - Tamil Movie News". Behindwoods.com. 2011-01-19. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  6. IANS (2013-09-19). "Never forced my son to act: Rajesh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  7. "Actor Rajesh's Wife Passes Away - Rajesh - Mahanadi - Billa - Red - Joan Sylvia Rajesh - Tamil Movie News - Behindwoods.com". www.behindwoods.com. Archived from the original on 3 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
  8. "ராஜேஷ் வாழ்க்கையில் எதிர்பாராத சோதனை: கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்தார்!" [Unexpected tribulation in Rajesh's life: Sold off his home to pay debts]. Maalai Malar. June 15, 2012. Archived from the original on 18 June 2012.
  9. 9.0 9.1 Kumar, S. r Ashok (23 April 2020). "'Life has come full circle for me,' says veteran TV and film actor Rajesh". The Hindu. Archived from the original on 7 May 2020. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஷ்&oldid=4156378" இலிருந்து மீள்விக்கப்பட்டது