இராஜேந்திர சிங் பாபு
எஸ். வி. இராஜேந்திர சிங் பாபு | |
---|---|
2016, 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எஸ். வி. இராஜேந்திர சிங் பாபு | |
பிறப்பு | 22 அக்டோபர் 1952 மைசூர், கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | பாபு |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1972–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அனுராதா |
பிள்ளைகள் | 3 |
எஸ். வி. இராஜேந்திர சிங் பாபு (S. V. Rajendra Singh Babu, பிறப்பு அக்டோபர் 22,1952) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர், மைசூரில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை சங்கர் சிங் மகாத்மா பிக்சர்ஸ் (மைசூர்) என்ற பெயரில் பல படங்களைத் தயாரித்தவர். இராஜேந்திர சிங் பாபு, காதல் கதைகள், போர் திரைப்படங்கள், பரபரப்பூட்டும் திரைப்படங்கள் மற்றும் நகைச்சுவைத் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளை கன்னடத்திலும் இந்தியிலும் இயக்கியுள்ளார். இவரது பல திரைப்படங்கள் புதினங்கள் அல்லது சிறுகதைகளிலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளன. பாபு தனது படங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். தயாரிப்பாளரும் நடிகையுமான விஜயலட்சுமி சிங் இவரது சகோதரி ஆவார். மைத்துனர் ஜெய் ஜெகதீஷ் ஒரு நடிகர்.
இளமை வாழ்க்கை
[தொகு]இராஜேந்திர சிங் பாபு மைசூரில் ஒரு இராஜ்புத்திரக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] இவரது தந்தை மறைந்த சங்கர் சிங் கன்னட திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்தார். இவரது தாயார் பிரதிமா தேவி கன்னடத் திரையுலகில் ஒரு நடிகை ஆவார். திரைப்பட தயாரிப்பாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பாபுவுக்கு தி கிரேட் எஸ்கேப், கன்ஸ் ஆஃப் நவரோன் மற்றும் தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் கவாய் போன்ற படங்களில் ஆர்வம் இருந்தது. திரைப்படம் என்பது பார்வையாளர்களுக்கு அருகில் செல்ல வேண்டும் என்று இவர் நம்புகிறார்.[2] சிவசரனே நம்பெக்கா (1955) மற்றும் பக்த சேதா (1961) போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "राजपूताना के योद्धा आए, देखे और ठहरे रहे" (in இந்தி). 10 May 2010.
- ↑ " His view on cinema
- ↑ Angadi, Jagadish (17 August 2021). "Rajendra Singh Babu: I gave Kannada many firsts". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 6 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240606092422/https://www.deccanherald.com/entertainment/rajendra-singh-babu-i-gave-kannada-many-firsts-859608.html#google_vignette.