இராஜேசுவர் சாசுதிரி திராவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேசுவர் சாசுதிரி திராவிட்
பிறப்பு1899
உத்தரப்பிரதேசம், இந்தியா
இறப்பு1950
பணிஎழுத்தாளர், இலக்கணவாதி, மொழிப்பெயர்ப்பாளர்
அறியப்படுவதுசம்சுகிருத இலக்கியம்
விருதுகள்

இராஜேசுவர் சாசுதிரி திராவிட் (Rajeshwar Shastri Dravid)(1899-1950) என்பவர் இந்திய எழுத்தாளர், அறிஞர், இலக்கண அறிஞர் மற்றும் சமசுகிருத இலக்கியத்தின் மொழிபெயர்ப்பாளர் ஆவார்.[1] இவர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1899-ல் பிறந்தார். திராவிட் சமசுகிருதத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் சாங்க்யகாரிகா, பாரதிய-ராஜனிதி-பிரகாஷா மற்றும் ரிஷிகல்பண்யாஸம் ஆகியவை அடங்கும். இவரது சகோதரர், இராஜா இராம் திராவிட், பண்டைய இந்தியத் தத்துவத்தின் மீதான விமர்சனமான, இந்தியத் தத்துவத்தில் உலகளாவிய பிரச்சனை நூலின் ஆசிரியர் ஆவார். இந்திய அரசு இவருக்கு 1960-ல் இந்தியாவின் மூன்றாவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. OpenLibrary.org (2018-05-23). "Dravid, Rajeshwar Shastri, 1899-". openlibrary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  2. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.

வெளி இணைப்புகள்[தொகு]