இராஜு பிசுதா
இராஜு பிசுதா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | எசு. எசு. அகுல்வாலியா |
தொகுதி | டார்ஜீலிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 சனவரி 1986 சேனாபதி மாவட்டம், மணிப்பூர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அனிதா (தி. 2006) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | டார்ஜீலிங், மேற்கு வங்காளம் [பஞ்சாபி பாக், மேற்கு தில்லி மாவட்டம் |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, மோத்பாங் (இளங்கலை) |
தொழில் | தொழிலதிபர், சமூக சேவகர் |
கையெழுத்து | |
மூலம்: [1] |
இராஜு பிசுதா (Raju Bista; பிறப்பு 3 சனவரி 1986) ஓர் இந்திய அரசியல்வாதியும் சூர்யா ரோசினி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் பாஜகவின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ஆவார். 14 சூலை 2021 அன்று, இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பிசுதா 3 சனவரி 1986 அன்று மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள சர்காஜரேயில் விஷ்ணு மற்றும் பிரபா பிசுதாவின் மகனாக கோர்கா குடும்பத்தில் பிறந்தார். மணிப்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைவுக் கல்லூரியாக மோட்பங்கில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை கலை பட்டம் பெற்றார். பிசுதா 6 அக்டோபர் 2006 அன்று அனிதா என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தொழிலதிபராகவும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.[1][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "With Raju Bista's victory, Manipur's Nepali community gets its first MP". K Sarojkumar Sharma. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 May 2019. Archived from the original on 1 August 2022. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
- ↑ "33 year-old youth from Manipur is Darjeeling's new MP". Northeast Now. 23 May 2019. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. Archived from the original on 5 October 2022. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.