இராஜிவ் தீக்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜிவ் தீக்சித்
பிறப்பு11 (1967)
இறப்பு30 நவம்பர் 2010(2010-11-30) (அகவை 43)[1]
பிலாய், சத்தீசுகர், இந்தியா
வலைத்தளம்
rajivdixit.in

இராஜீவ் தீக்சித் (Rajiv Dixit ;30 நவம்பர் 1967 - 30 நவம்பர் 2010) [2] ஒரு இந்திய சமூக ஆர்வலராவார்.

இவர் சுதேசி செயல்பாட்டின் தீவிர ஊக்குவிப்பாளராக இருந்தார். மேலும், பாரத் சுவாபிமான் அறக்கட்டளையின் தேசிய செயலாளராகவும் இருந்தார். இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத்தில் பெற்றார் .

தொழில்[தொகு]

உலகமயமாக்கலுக்கான போக்கின் ஒரு பகுதியாக பல தேசிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், 1990களின் முற்பகுதியில் "ஆசாதி பச்சாவ் அந்தோலன்" (சுதந்திரத்தை காப்பாற்ற இயக்கம்) என்ற அமைப்பை தீக்சித் நிறுவினார்.[3] [4] [5] ராம்தேவின் உதவியாளரான இவர் ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு அமைப்பான பாரத் சுவாபிமான் அந்தோலனின் தேசிய செயலாளராக பணியாற்றினார்.[1]

ஒரு ஆர்வலராக தனது வாழ்க்கையின் போது, தீக்சித் இந்திய வரிவிதிப்பு முறையை பரவலாக்க கோரினார். தற்போதுள்ள அமைப்பு அதிகாரத்துவ ஊழலுக்கு முக்கிய காரணம் என்று கூறினார். வரி வருவாயில் 80 சதவிகிதம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் சம்பளத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக இவர் கூறினார். இந்திய அரசாங்கத்தின் நவீன நிதி நிலை அறிக்கை முறையை இந்தியாவில் முந்தைய பிரித்தானிய இந்தியப் பேரரசுடன் ஒப்பிட்டார். [6]

இறப்பு[தொகு]

தீக்சித் 30 நவம்பர் 2010-ல் சத்தீசுகரின் பிலாய் நகரில் இறந்துவிட்டார். மாரடைப்பு இவரது மரணத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இவரது இறுதி சடங்கை ராம்தேவும் ராஜீவின் சகோதரர் பிரதீப் ஆகியோர் நடத்தினர். இருப்பினும், தீக்சிதின் சில நண்பர்கள், தீட்சித் பிரபலமடைவதை ராம்தேவ் விரும்பவில்லை என்றும், இவருடைய மரணத்தில் ராம்தேவ் ஒரு பங்கைக் கொண்டிருந்தார் என்றும் ஊகித்தனர். இருப்பினும், ராம்தேவ் தனது அரசியல் எதிரிகளின் சதி கோட்பாடுகள் என இக்கூற்றுக்களை நிராகரித்தார்.[7]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Kidwai, Rasheed (19 June 2016). "Baba's 'plan' that went bust". The Telegraph. https://www.telegraphindia.com/india/baba-s-plan-that-went-bust/cid/1516482. 
  2. Team, ThePrint (3 May 2018). "The 'irresponsible,". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
  3. Kumaraswam, B. M. (2 December 2010), "Youthful crusader of Swadeshi", தி நியூ இந்தியன் எக்சுபிரசு, சீமக்கா
  4. Priyanka P. Narain (5 April 2009), And then, there will be a revolution, Mint
  5. Raju Bist (29 June 2004), "A price too high for Indian farmers", Asia Times, மும்பை, archived from the original on 4 August 2004
  6. "Decentralise taxes, says Azadi Bachao Andolan supporter", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 9 March 2003, archived from the original on 11 August 2011
  7. Worth, Robert F. (2018). "The Billionaire Yogi Behind Modi’s Rise". The New York Times. https://www.nytimes.com/2018/07/26/magazine/the-billionaire-yogi-behind-modis-rise.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜிவ்_தீக்சித்&oldid=3293902" இலிருந்து மீள்விக்கப்பட்டது