இராஜா அம்பாட் தீவுகள்
![]() இராஜா அம்பாட் பரந்த காட்சி | |
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 0°14′00″S 130°30′28″E / 0.2333115°S 130.5078908°E |
தீவுக்கூட்டம் | மெலனீசியா |
மொத்தத் தீவுகள் | 612 |
முக்கிய தீவுகள் | மிசூல் தீவு; சலாவதி தீவு; பத்தாந்தா தீவு; வைகியோ தீவு |
பரப்பளவு | 8,034.44 km2 (3,102.11 sq mi) |

இராஜா அம்பாட் தீவுகள் அல்லது இராஜா அம்பாட் பிராந்தியம் (இந்தோனேசியம்: Kepulauan Raja Ampat; ஆங்கிலம்: Raja Ampat Islands; Four Kings) என்பது நியூ கினி தீவில்; இந்தோனேசியா, தென்மேற்கு பப்புவா மாகாணத்தில், பறவைத் தலை தீபகற்பத்தின் வடமேற்கு முனையிலிருந்து அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.
இது வைகியோ தீவு (Waigeo), சலாவதி தீவு (Salawati), மிசூல் தீவு (Misool) மற்றும் பத்தாந்தா தீவு (Batanta) ஆகிய நான்கு முக்கிய தீவுகள், கோபியாவ் (Kofiau) என்ற சிறிய தீவு; 1,500 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகள், மணல் தீவுகள் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளைக் கொண்டுள்ளது.
இராஜா அம்பாட் தீவுக்கூட்டம் நிலநடுக் கோட்டைக் கடந்து செல்கிறது; மற்றும் பவள முக்கோணத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. இது பூமியில் வளமான கடல் பல்லுயிர் கொண்ட தென்கிழக்காசியக் கடல்களின் ஒரு பகுதியாகும்.
பவள முக்கோணம்
[தொகு]பவள முக்கோணம் (ஆங்கிலம்: Coral Triangle) என்பது, இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் கடல்சார் பகுதியாகும்.
இந்தப் பவள முக்கோணம், கடல்வாழ் பல்லுயிர்களின் அனைத்துலக மையம் என்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பவள முக்கோணத்தில், பெரிய வகை திமிங்கலச் சுறா மீன்களைத் தவிர, 3,000-க்கும் மேற்பட்ட மற்ற மீன் இனங்களும் உள்ளன.
7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அரிய வகை மீன் இனமான சீலகாந்த் (Coelacanth) மீன்களும், இந்த முக்கோணத்தில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த மீனை 1952-ஆம் ஆண்டில் கன்டுபிடித்தார்கள்.[1][2] உலகில் ஏழு வகையான கடலாமைகள் உள்ளன. அவற்றில் ஆறு வகை ஆமைகள், இந்தப் பவள முக்கோணத்தில்தான் காணப் படுகின்றன.[3]
பொது
[தொகு]
நிர்வாக அடிப்படையில், இந்தத் தீவுக்கூட்டம் தென்மேற்கு பப்புவா மாகாணத்தின் ஒரு பகுதியாகும். பவள முக்கோணத்தின் பெரும்பாலான தீவுகள் இராஜா அம்பாட் பிராந்தியத்தை உருவாக்குகின்றன. இராஜா அம்பாட் தீவுகள் 2004-இல் சோரோங் பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
இந்த இராஜா அம்பாட் பிராந்தியம் சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் (27,000 சதுர மைல்) நிலம் மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கியது. இதில் 8,034.44 கிமீ2 நிலப்பரப்பைக் கொண்டுள்ளது .
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 64,141 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது;[4] 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உள்ள அதிகாரப்பூர்வ மதிப்பீடு 66,839 ஆகும்.[5] இராஜா அம்பாட் பிராந்தியத்தில், சலாவதி தீவின் தெற்குப் பகுதி சேர்க்கப்படவில்லை. சலாவதி தீவு, இராஜா அம்பாட் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இல்லை. மாறாக சோரோங் பிராந்தியத்தின் சலாவதி செலாத்தான் (Salawati Selatan) மற்றும் சலாவதி தெங்கா (Salawati Tengah) மாவட்டங்களை சலாவதி தீவு உருவாக்குகிறது.
வரலாறு
[தொகு]இராஜா அம்பாட் சமயங்கள் (2010)
50,000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜா அம்பாட் தீவுகளுக்கு மனிதர்கள் முதன்முதலில் சென்றதாக தொல்பொருள் சான்றுகள் குறிப்பிடுகின்றன.[6] மோலோலோ குகை தளத்தில், தொடக்ககால மக்கள் மர பிசின்களைப் பதப்படுத்தியதாகவும்,[7] விலங்குகளை வேட்டையாடியதாகவும் அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன.
மட்பாண்டங்களைத் தயாரிக்கும் திறன்பெற்ற சமூகங்கள் சுமார் 3500–3000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜா அம்பாட்டிற்கு குடிபெயர்ந்தன; மேலும் அவர்கள் ஆஸ்திரோனேசிய மொழிகளைப் இப்பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.[8]
பாகன் சுல்தானகம்
[தொகு]1526-ஆம் ஆண்டில் போர்த்துகீசிய மாலுமி ஜார்ஜ் டி மெனெசஸ் மற்றும் அவரது குழுவினர், இராஜா அம்பாட் தீவுகளை முதன்முதலில் பார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகன் சுல்தானகத்துடன் (Sultanate of Bacan) ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளின் காரணமாக, 15-ஆம் நூற்றாண்டில் இசுலாம் முதன்முதலில் இராஜா அம்பாட் தீவுகளுக்கு வந்தது.[9]
16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில், மலுக்குவை தளமாகக் கொண்ட திடோர் சுல்தானகம் (Sultanate of Tidore); இராஜா அம்பாட் தீவுகளுடன் நெருக்கமான பொருளாதார அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தது. இந்தக் காலக்கட்டத்தில், இசுலாம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் உள்ளூர்த் தலைவர்கள் இசுலாத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.[10]
காட்சியகம்
[தொகு]- இராஜா அம்பாட் காட்சிப் படங்கள்
பொதுவகத்தில் Raja Ampat Regency தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ There are only two known species of coelacanths: one that lives near the Comoros Islands off the east coast of Africa, and one found in the waters off Sulawesi, Indonesia.
- ↑ 1952: Coelacanths "discovered" to inhabit the Comoro Islands.
- ↑ The Nature Conservancy. Coral Triangle Facts, Figures, and Calculations: Part II: Patterns of Biodiversity and Endemism, December 16, 2008
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2023.
- ↑ Tanudirjo, Daud Aris; Gaffney, Dylan (2024-08-12). "New evidence from West Papua offers fresh clues about how and when humans first moved into the Pacific". The Conversation (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-03.
- ↑ Gaffney, Dylan; Tanudirjo, Daud A.; Djami, Erlin Novita Idje; Mas'ud, Zubair; Macap, Abdul Razak; Russell, Tristan; Dailom, Moses; Ray, Yulio et al. (2024-08-13). "Human dispersal and plant processing in the Pacific 55 000–50 000 years ago" (in en). Antiquity 98 (400): 885–904. doi:10.15184/aqy.2024.83. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-598X. https://www.cambridge.org/core/journals/antiquity/article/human-dispersal-and-plant-processing-in-the-pacific-55-00050-000-years-ago/49D5AEACCEA56622FEB88C0F248C63EE.
- ↑ Gaffney, Dylan; Tanudirjo, Daud (2024). "Late Holocene potting traditions in the far western Pacific: Evidence from the Raja Ampat Islands, 3500–1000 BP". Terra Australis 57: 359–390. https://press-files.anu.edu.au/downloads/press/n12314/pdf/ch17.pdf.
- ↑ Wanggai, Toni V. M. (2008). Rekonstruki sejarah umat Islam di tanna Papua [Reconstruction of the History of lslam in Papua]. Syariff Hidayatullah State Islamic University Jakarta (in Indonesian). Retrieved 2022-03-13.
- ↑ Slama, Martin (2015), "Papua as an Islamic Frontier: Preaching in 'the Jungle' and the Multiplicity of Spatio-Temporal Hierarchisations", From 'Stone-Age' to 'Real-Time': Exploring Papuan Temporalities, Mobilities and Religiosities, ANU Press, pp. 243–270, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-925022-43-8