உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜாராம் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜாராம் கல்லூரி (Rajaram College), கோலாப்பூர் என்பது கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஓர் அரசு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 11 மற்றும் 12ஆம் வகுப்பு போன்ற இளையோர் கல்லூரி அளவிலான படிப்புகளையும், அறிவியல், மனிதநேயம், மொழிகள் மற்றும் கலைகளில் இளம் அறிவியல் மற்றும் இளங்கலைப் போன்ற இளநிலை பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. உளவியல் மற்றும் மனையியல் அறிவியலில் முதுநிலைப் பட்டப் படிப்பினையும் வழங்குகிறது. இது பகுப்பாய்வு வேதியியலில் முதுநிலை அறிவியல் படிப்பினையும் நடத்துகிறது. அறிவியல் மற்றும் கலைகளில் மேல்நிலைக் கல்விப் படிப்புகளை வழங்கும் பிரபலமான இளையோர் கல்லூரியும் இங்கு உள்ளது.

வரலாறு

[தொகு]

இராஜாராம் கல்லூரி 1880ஆம் ஆண்டில் கோலாப்பூர் மகாராஜாவால் நிறுவப்பட்டது. இது கோலாப்பூர் நகரின் பழமையான கல்லூரியாகவும், மகாராட்டிரவின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகவும் உள்ளது. இது மும்பை பல்கலைக்கழகத்துடனும் பின்னர் புனே பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டது. 1962ஆம் ஆண்டில் கோலாப்பூரில் சிவாஜி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் பின்னர் இராஜாராம் கல்லூரி சிவாஜி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இராஜாராம் கல்லூரி கோலாப்பூரில் சிவாஜி பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தது. சிவாஜி பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், இராஜாராம் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜி. பவார் ஆவார். இராஜாராம் கல்லூரி அரசியலில் பல சிறந்த தலைவர்களை வழங்கியுள்ளது. இது பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள், தரைப்படை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை (இஆப, இகாப மற்றும் இஅப அதிகாரிகள்) தோற்றுவித்த கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரி 2005ஆம் ஆண்டில் தனது 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

இந்தக் கல்லூரி சிவாஜி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் இங்குப் படிக்கின்றனர். இது கோலாப்பூர் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. அங்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பலர் இன்ப நடைப்பயணத்திற்காக வருகிறார்கள்.


இந்தக் கல்லூரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அழகிய வளாகத்தைக் கொண்டுள்ளது. இதன் 13 சுயாதீன கட்டிடங்களில் 2000 பேர் அமரக்கூடிய கலையரங்கமும் அடங்கும். முனைவர் பாலகிருஷ்ணா நூலகத்தில் 1,25,000க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ளன.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்

[தொகு]
  • எச். பி. காந்தி-1950களில் உயிரியல் விரிவுரையாளர் .
  • விநாயக கிருஷ்ண கோகாக் (ஞானபீட விருது)
  • வி. டி. பாட்டீல், மௌனி வித்யாபீடத்தின் நிறுவனர்
  • வசந்த்ராவ் காட்ஜே, காட்ஜே பாட்டீல் போக்குவரத்து நிறுவனத்தின் நிறுவனர்.
  • டாக்டர் பாலகிருஷ்ணா, வரலாற்றாசிரியர், இலண்டன் அரச கழக உறுப்பினர்
  • நாராயண் சீதாராம் பாட்கே, எழுத்தாளர்
  • மாதவ் பட்வர்தன், கவிஞர் மாதவ் ஜூலியன் என்றும் அழைக்கப்படுகிறார்
  • பார். பாலசாகேப் கர்தேகர், கல்வியாளர், மக்களவை உறுப்பினர், கோலாப்பூர் கோகலே கல்லூரியின் நிறுவனர்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narlikar, Jayant Vishnu (2012). Chaar Nagaraantale Maajhe Vishwa(चार नगरांतले माझे विश्व). Mouj Prakashan Gruha, Khatau Wadi, Girgaon, Mumbai. p. 5.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாராம்_கல்லூரி&oldid=4167534" இலிருந்து மீள்விக்கப்பட்டது