உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜலட்சுமி
பிறப்பு(1930-06-02)சூன் 2, 1930
செர்புலச்சேரி, பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்புசனவரி 18, 1965(1965-01-18) (அகவை 34)
கேரளம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம் இந்தியா
வகைசிறுகதை, புதினம், கவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • ஒரு வழியும் குரே நிழலுகளும்
  • ஞானென்ன பாவம்
  • உச்சவெளியிலும் இளநிலவும்
குறிப்பிடத்தக்க விருதுகள்
  • 1960 புதினத்திற்கான கேரள சாகித்திய அகாதமி விருது
குடும்பத்தினர்
  • அச்சுத மேனன் (தந்தை)
  • குட்டிKuttimalu Amma (mother)

தக்கத்து அமயன்கோட்டு ராஜலட்சுமி (Takkathu Amayankottu Rajalakshmi) (ஜூன் 2,1930-ஜனவரி 18,1965), இந்திய புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும் மற்றும் மலையாள இலக்கியக் கவிஞர் ஆவார். இவர் மூன்று புதினங்கள், இரண்டு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கேரள சாகித்ய அகாடமி 1960 ஆம் ஆண்டில் புதினதிற்கான வருடாந்திர விருதை இவருக்கு வழங்கியது. இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபராக ஆனார். இவரது புத்தகமான ஒரு வழியும் குரே நிழலுகளும், என்பது ஒரு தொலைத் தொடராகவும், அனைத்திந்திய வானொலி நாடகமாகவும் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இளமை வரலாறு

[தொகு]

இராஜலட்சுமி 1930 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள செர்புலச்சேரி எனும் ஊரில் மராத் அச்சுத மேனன் மற்றும் தக்கத்து அமயன்கோட்டு குட்டியம்மாலு அம்மா ஆகியோருக்கு இளைய மகளாக பிறந்தார். இந்திய கணிதவியலாளர் தெ. அ. சரசுவதி அம்மா இவரது மூத்த சகோதரி ஆவார்.[1][2] எர்ணாகுளம், மகாராஜாவின் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்ற பின்பு, மலையாளத்தில் தனது முதுகலையை முடிக்க திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும் பாதியிலேயே தனது படிப்பை கைவிட்ட இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] பின்னர், விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இராஜலட்சுமி, பெருந்தானி, பந்தளம் மற்றும் ஒற்றப்பாலம் ஆகிய இடங்களில் உள்ள நாயர் சேவை சங்கத்தின் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார்.[3]

ஜனவரி 18,1965 அன்று, காலையில் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பிய இராஜலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது இவருக்கு வயது 34. [4][5]

மரபும் கௌரவமும்

[தொகு]

இராஜலட்சுமி மலையாளத்தின் எமிலி புராண்ட்டி என்று அழைக்கப்படுகிறார். 1956 ஆம் ஆண்டில் மாத்ருபூமி வார இதழில் வெளியிடப்பட்ட மகால் என்ற சிறுகதை இவரது முதல் குறிப்பிடத்தக்க படைப்பாகும். அதைத் தொடர்ந்து ஏழு சிறுகதைகளும் உரைநடை கவிதையும் அந்த இதழில் வெளிவந்தன.[5] சிறுகதைகள் மற்றும் இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தவிர, இவர் மூன்று புதினங்களையும் எழுதியுள்ளார். ஒரு வழியும் குரெ நிழலுகளும் (ஒரு பாதையும் மற்றும் ஒரு சில நிழல்களும்) தொடங்கி, அங்கு இவர் பெண்களின் மென்மையான உணர்ச்சிகளை சித்தரித்தார்.[6] மேலும் இந்தக் கதை 1960 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருதை பெற்ற மூன்றாவது நபராக இவரை ஆக்கியது.[7] இது பின்னர் ஒரு தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டது. மேலும் அனைத்திந்திய வானொலி நாடகமாகவும் ஒளிபரப்பப்பட்டது.[8][9] ஞானென்ன பாவம்,உச்சவெளியிலும் இளநிலவும் ஆகியவையும் இவர் எழுதிய பிற புதினங்களாகும்.

1967 ஆம் ஆண்டு பெரும்பாடம் ஸ்ரீதரன் எழுதிய அபயம் என்ற புதினம் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 1970 ஆம் ஆண்டு இராமு கரியத்த்தின் அபயம் என்ற திரைப்படம் இந்த நூலை தழுவலாகும்.[10][11] குறுக்கெழுத்து புத்தக விருது பெற்ற எழுத்தாளர் அனிதா நாயர், தனது 2018 இல் எழுதிய ஈட்டிங் வாஸ்ப்ஸ் என்ற நூலில் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்.[12][13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-13. Retrieved 2019-04-13.
  2. "T. A. Sarasvati Amma - Obituary" (PDF). 2012-03-16. Archived from the original (PDF) on 2012-03-16. Retrieved 2019-04-13.
  3. 3.0 3.1 Jayasree, G. S. (2015-09-24). "Rajalekshmi, the reclusive author". The Hindu (in Indian English). Retrieved 2019-04-13.
  4. "The 'why' remains, 47 years later". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/the-why-remains-47-years-later/article3634104.ece. 
  5. 5.0 5.1 "'എഴുതാതിരിക്കാൻ വയ്യ, ജീവിച്ചിരിക്കുകയാണെങ്കിൽ ഇനിയും എഴുതി പോകും'; പേനയ്ക്ക് വിലക്കി..." www.marunadanmalayali.com. Retrieved 2019-04-13.
  6. "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-14. Retrieved 2019-04-14.
  7. "Kerala Sahitya Akademi Award for Novel". Kerala Sahitya Akademi. 2019-04-13. Retrieved 2019-04-13.
  8. "Mentioned in an actress interview in The Hindu, Sept 15, 2006". Archived from the original on 12 May 2011. Retrieved 19 January 2007.
  9. "AIR to broadcast plays based on novels". http://www.hindu.com/2007/01/01/stories/2007010100420200.htm. 
  10. "Abhayam: 1970". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/abhayam-1970/article8403119.ece. 
  11. "Abhayam: A Lost Gem". stancemagazine.in. Archived from the original on 30 June 2017. Retrieved 2019-04-13.
  12. Bagchi, Shrabonti (2018-10-05). "Anita Nair's new novel tells the story of a girl who ate a wasp". livemint.com (in ஆங்கிலம்). Retrieved 2019-04-13.
  13. Akundi, Sweta (2018-12-10). "What a wasp tastes like". The Hindu (in Indian English). Retrieved 2019-04-13.

மேலும் வாசிக்க

[தொகு]
  • T. Palakeel, Women Writing in the Age of Modernity and Postmodernity, student course materials at Bradley University, Illinois accessed at [1] 18 Jan 2007

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜலட்சுமி&oldid=4217405" இலிருந்து மீள்விக்கப்பட்டது