இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராசபாளையம்
—  நகராட்சி  —
இராசபாளையம்
இருப்பிடம்: இராசபாளையம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812ஆள்கூறுகள்: 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி, இ. ஆ. ப [3]
பெருநகராட்சி தலைவர்
சட்டமன்றஉறுப்பினர் தங்கபாண்டியன்.S
மக்கள் தொகை 1,30,119 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராசபாளையம் (Rajapalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள் இராஜபாளையம் வட்டம் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.[4] மற்றும் மாவட்டத்தில் முதல் மிகப்பெரிய நகரம் ஆகும்.இது மதுரையின் தென்மேற்கே 85கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இங்குள்ள அய்யனார் அருவியும் அருகாமையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரும் சுற்றுலா இடங்களாகும்.இங்குள்ள பொருளாதாரம் துணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய இனமாகும்.

வரலாறு[தொகு]

இங்கு 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு இராசபாளையம் என்ற பெயர் வரலாயிற்று. அவர்கள் வருகைக்கு முன்பிருந்தே இங்கு பிற தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டை என்று பொருள்படும்.[5] பழைய பாளையம் மற்றும் புதுப்பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளது. விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் கீழராசகுலராமனில் தங்கியிருந்து பின்னர் இங்கு குடிபெயர்ந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கர் கீழ் பணிபுரிந்து வந்தனர். 1885ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கிடம் இருந்து வாங்கி இராசபாளையம் நகரத்தை உருவாக்கினர்.

துவக்கத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக இருந்தது. 1900களில் வணிக முயற்சிகள் முன்னேறத் துவங்கின. அவர்களது முயற்சியாலும் கடின உழைப்பாலும் பருத்தி சார்ந்த பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,30,119 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 64,624 ஆண்கள், 65,495 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 86.25% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.18%, பெண்களின் கல்வியறிவு 80.43% ஆகும்.மக்கள் தொகையில் 10,504 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலா[தொகு]

இணைக்கப்பட்டுள்ள படங்கள் சஞ்சீவி மலையிலிருந்து எடுக்கப்பட்டவை. மேற்குத் தொடர்ச்சி மலை பின்னணியில் உள்ளது.

அய்யனார் கோவில் அருவி[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அய்யனார் அருவி அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. இவ்விடம் மலையேறும் விளையாட்டுகளுக்கு தகுந்தது. இங்கு ஏராளமான குரங்குகளும் மேலும் பல்வேறு வகையான விலங்கினங்களும் வசித்து வருவதோடு வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. செல்லும் வழியில் உள்ள அணையிலிருந்து நகரின் குடிநீர்த்தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.


சஞ்சீவி மலை

நகருக்கு கிழக்கு பக்கம் மலைபோல் அமைந்துள்ள ஒரு குன்று. இந்த மலைமீது முருகன் கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் அடிவாரத்தில் வனத்துறை கட்டுபாட்டு அலுவலகம் அமைந்துள்ளது.


ராக்காச்சி அம்மன் கோவில்

மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது ராக்காச்சி அம்மன் கோவில். இங்கும் ஓடும் நீர்நிலைகள் காணப்படுகின்றன.

முக்கிய மேல்நிலைப் பள்ளிகள்[தொகு]

 • நாடார் மேல்நிலைப் பள்ளி
 • பி.ஏ.சின்னையாராஜா மேல்நிலை பள்ளி
 • பி.ஏ.சி.ஆர்.அம்மனிஅம்மாள் பெண்கள் மெல்நிலை பள்ளி
 • சேத்தூர் சேவக பாண்டியர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
 • சேத்தூர் சேவக பாண்டியர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
 • என் ஏ அன்னப்பராஜா மேல்நிலை பள்ளி
 • ஏகேதர்மராஜா பெண்கள் மேல்நிலை பள்ளி
 • ஏகேதர்மராஜா ஆண்கள் மேல்நிலை பள்ளி
 • ஸ்ரீ அய்யன் கேந்திர  வித்யாலயா  சிபிஸ்சி  பள்ளி

முக்கிய கல்லூரிகள்[தொகு]

 • பி. ஏ. சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக்
 • ராம்கோ பொறியியல் கல்லூரி
 • ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி
 • ஏகேதர்மராஜா பெண்கள் கல்லூரி
 • மஞ்சம்மாள் பாலிடெக்னிக்

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. இராசபாளையம் நகராட்சியின் இணையதளம்
 5. History of Rajapalayam
 6. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]