இராஜன்பூர் மாவட்டம்
இராஜன்பூர் மாவட்டம்
ضِلع راجن پُور | |
|---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இராஜன்பூர் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | பாக்கித்தான் |
| மாகாணம் | பஞ்சாப் |
| நிறுவிய ஆண்டு | 1 சூலை 1982 |
| தலைமையிடம் | இராஜன்பூர் |
| வருவாய் வட்டங்கள் | 03 |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| • நாடாளுமன்றத் தொகுதிகள் | இராஜன்பூர் 1 & இராஜன்பூர் 2 |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 12,318 km2 (4,756 sq mi) |
| ஏற்றம் | 97 m (318 ft) |
| உயர் புள்ளி | 1,463 m (4,800 ft) |
| தாழ் புள்ளி | 90 m (300 ft) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 23,23,980 |
| • அடர்த்தி | 190/km2 (490/sq mi) |
| • நகர்ப்புறம் | 6,31,223 (26.51%) |
| • நாட்டுப்புறம் | 17,49,826 (73.49%) |
| எழுத்தறிவு (2023) | |
| • எழுத்தறிவு |
|
| நேர வலயம் | ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 33500 |
| இடக் குறியீடு | தொலைபேசி குறியீடு எண் 604 |
இராஜன்பூர் மாவட்டம் (Rajanpur), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தில் தென்மேற்கில், பலூசிஸ்தான் மாகாணத்தின் எல்லைப்புறத்தில் அமைந்த இம்மாவட்டத் தலைமையிடம் இராஜன்பூர் நகரம் ஆகும். இராஜன்பூர் நகரம் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 562 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்து]க்கு தென்மேற்கே 763 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]இராஜன்பூர் மாவட்டத்தின் வடக்கே தேரா காசி கான் மாவட்டம், வடகிழக்கில் முசாப்பர்கர் மாவட்டம், தென்கிழக்கில் ரகீம் யார்கான் மாவட்டம் மற்றும் மேற்கில் பலூசிஸ்தான் மாகாணமும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 354,016 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 23,81,049 ஆகும்.[3]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.19 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 36.09% ஆகும்.[1][4]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8,16,895 (35.15%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 6,31,223 (26.51%) மக்கள் வாழ்கின்றனர்.[1]
மொழி & இனக்குழுக்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் சராய்கி மொழி 76.67%, பலூச்சி மொழி 17.77% மற்றும் பஞ்சாபி மொழி 2.28% மக்கள் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[6]இம்மாவட்டத்தில் ஜாட், இராஜபுத்திரர்கள், பலூச்சி மக்கள் மற்றும் அரேன் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

சமயம்
[தொகு]| சமயக் குழுக்கள் | 1941[7]:62-63 | 2017[8] | 2023[9] | |||
|---|---|---|---|---|---|---|
| மக்கள் தொகை | % | மக்கள் தொகை | % | மக்கள் தொகை | % | |
| இசுலாம் |
227,182 | 89.97% | 1,993,874 | 99.89% | 2,317,597 | 99.73% |
| இந்து சமயம் |
24,496 | 9.70% | 1,442 | 0.07% | 1,030 | 0.04% |
| சீக்கியம் |
817 | 0.32% | பொருத்தமில்லை | பொருத்தமில்லை | 25 | ~0% |
| கிறித்துவம் |
3 | 0.01% | 111 | ~0% | 4,841 | 0.21% |
| அகமதியா | பொருத்தமில்லை | பொருத்தமில்லை | 493 | 0.02% | 339 | 0.01% |
| பிற சமயத்தவர் | 0 | 0% | 119 | 0.01% | 148 | 0.01% |
| மொத்த மக்கள் தொகை | 252,498 | 100% | 1,996,039 | 100% | 2,323,980 | 100% |
| Note: 1941 census data is for Rajanpur, Jampur and part of De-Excluded Area (then-named Biloch Trans-Frontier Tract) tehsils of erstwhile Dera Ghazi Khan District, which roughly corresponds to contemporary Rajanpur district. Population corresponding to de-excluded area was computed based on population of area remaining in the district after the formation of Rajanpur district, with ratios of religions assumed to be the same. District and tehsil borders have changed since 1941. | ||||||
மாவட்ட நிர்வாகம்
[தொகு]துணை ஆணையாளர் நிர்வாகத்தில் உள்ள இம்மாவட்டம் 4 வருவாய் வட்டங்களையும், 44 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[10]
| வருவாய் வட்டம்[11] | பரப்பளவு
(km²)[12] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[13] |
Union Councils |
|---|---|---|---|---|---|
| ரோஜன் வட்டம் | 2,905 | 474,077 | 163.19 | 20.98% | 9 |
| இராஜன்பூர் நகர் வட்டம் | 2,078 | 853,192 | 410.58 | 41.38% | 16 |
| இராஜன்பூர் ஊரக வட்டம் | 5,013 | 41,741 | 113.13 | 8.60% | ... |
| ஜாம்பூர் வட்டம் | 2,322 | 1,011,499 | 435.85 | 38.07% | ... |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "CENSUS OF INDIA, 1941 VOLUME VI PUNJAB PROVINCE". Retrieved 21 July 2022.
- ↑ "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ Tehsils & Unions in the District of Rajanpur – Government of Pakistan பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).