இராஜசேகர் பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜசேகர் பாசு
பிறப்புமார்ச்சு 16, 1880(1880-03-16)
பாமுன்பரா, கந்தர்சோனா, பிரித்தானிய இந்தியா (தற்போது கிழக்கு வர்த்தமான், மேற்கு வங்காளம், இந்தியா) [1]
இறப்பு27 ஏப்ரல் 1960(1960-04-27) (அகவை 80)

இராஜசேகர் பாசு (Rajshekhar Basu) ( வங்காள மொழி: রাজশেখর বসু)(16 மார்ச் 1880 - 27 ஏப்ரல் 1960), ) பரசுராம் என்ற தனது புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட இவர் ஓர் வங்காள எழுத்தாளரும்,வேதியியலாளரும், சொற்பொழிவாளரும் ஆவார். இவர் தனது நகைச்சுவை, நையாண்டிச் சிறுகதைகளுக்கு முக்கியமாக அறியப்பட்டார். மேலும் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய வங்காள மொழி நகைச்சுவையாளராகக் கருதப்படுகிறார். இந்திய அரசு இவருக்கு 1956 இல் பத்ம பூசண் விருது வழங்கியது.[2]

இலக்கிய வாழ்க்கை[தொகு]

பாசு, 1920களில் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாத இதழுக்கு நகைச்சுவையான துணுக்குகளை எழுதும் போது பரசுராம் என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டார். இவரது முதல் கதைப் புத்தகம், கத்தலிகா, 1924 இல் வெளியிடப்பட்டது. மேலும், இரவீந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளின் பாராட்டைப் பெற்றது. 1937ஆம் ஆண்டில், இவர், "சலந்திகா" என்ற ஒரு ஒற்றை வங்காள அகராதியை வெளியிட்டார்.

இவரது, சிறுகதைத் தொகுப்பான, ஆனந்திபாய் இத்யாதி கல்பா, 1958இல் வங்காள இலக்கியத்திற்கான சாகித்ய அகாதமி விருதை வென்றது. இந்தப் புத்தகம் பரசுராம் என்ற இவரது புனைப்பெயரில் வெளியிடப்பட்டது. இதில் பதினைந்து நையாண்டி கதைகள் இடம் பெற்றிருந்தன. காதல், பிரசாரம், குடும்பங்கள், அரசியல் ஆகிய கருப்பொருள்களைத் தொட்டன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Samsad Bangali Charitabhidhan (Bengali ed.), Subodh Chandra Sengupta and Anjali Bose, Sahitya Samsad, Calcutta, 1976, p. 458
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. நவம்பர் 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Bose, Rajasekhara; Acharyya, Saroj Ranjan (1959). "Anandibai Ityadi Galpa". Indian Literature 2 (2): 73–75. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. http://www.jstor.org/stable/23329329. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜசேகர்_பாசு&oldid=3708173" இருந்து மீள்விக்கப்பட்டது