நகராட்சி உயர்நிலைப்பள்ளி, இராஜகோபாலபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராஜகோபாலபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

'இராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி' புதுக்கோட்டை மாவட்டத்தில அமைந்துள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 10 வகுப்புகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் ரயில்நிலையம், பேருந்து நிலையம் இப்பள்ளிக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி 1998 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

பள்ளிச்செயல்பாடுகள்[தொகு]

இப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களிடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவிளான போட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக நவீன விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

மன்றச்செயல்பாடுகள்[தொகு]

ஐந்து பாடங்களுக்கும் தனித்தியான மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. மனற்ங்களில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.