இராஜகாரிய முறை ஒழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் நிலவிய இராஜகாரிய முறை ஐரோப்பாவில் நிலவிய நிலமானிய முறையை ஒத்தது. இதன் பண்புகளாவன:

 • நிலத்தை அடிப்படையாகக் கொண்டமை
 • விவசாயமே பிரதான தொழிலாக விளங்கியமை.
 • பண்டமாற்று முறையில் பொருட்கள் பரிமாறப்பட்டமை.
 • தொழிலை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு நிலவியமை

இலங்கையில் இராஜகாரிய முறை[தொகு]

இலங்கையில் இது பின்வரும் இரண்டு முறைகளில் காணப்பட்டன.

கட்டாய சேவை இராஜகாரிய முறை[தொகு]

 • நிலமனைத்தும் அரசனுக்கே சொந்தமானது. அதை அனுபவிப்பதற்காக மக்கள் இலவசமாக அரச பணிகளில் ஈடுபட வேண்டும்.

நிலத்தை அனுபவிப்பதற்கான இராஜகாரிய முறை[தொகு]

 • நிலத்தைப் பயன்படுத்தும் மக்கள் உற்பத்தியின் ஒரு பகுதியை வரியாக அரசனுக்கு வழங்க வேண்டும்.

ஓழிப்பு[தொகு]

ஐரோப்பாவில் இயற்கையான முறையில் இது அழிவுற்றது. இலங்கையில் சட்டத்தின் மூலமே ஆங்கிலேயர் இதனை ஒழித்தனர்.

தேசாதிபதி பிரடெரிக் நோத்தின் பங்களிப்பு[தொகு]

தேசாதிபதி பிரடெரிக் நோத் முதன் முறையாக இதனை ஒழித்தார். இது பிற்போக்கான ஒரு முறையாக இருந்தமையாலும் உழைப்புச் சுரண்டல் இடம்பெறுவதனாலும் பணப் பொருளாதாரத்திற்குத் தடையாக இருப்பதனாலும் இராஜகாரிய முறையை ஒழிப்பதாகக் குறிப்பிட்டார்.

சேர் தோமசு மெயிற்லண்ட் மீண்டும் எற்படுத்தியமை[தொகு]

தேசாதிபதி சேர் தோமசு மெயிற்லண்ட் மீண்டும் இம்முறையை ஏற்படுத்தினார். மக்கள் சம்பளத்திற்கு வேலைசெய்ய முன்வராமையால் அரச பணிகளை முன்னெடுப்பது சிரமமாக இருக்கவே இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.

கோல்புறூக் பிரபு முற்றாக ஒழித்தமை[தொகு]

கோல்புறூக் பிரபு (1833) முற்றாக இதனை ஒழித்தார். அதற்கான காரணங்களாவன:

 • மக்களை நில அடிமைத்துவத்திலிருந்து விடுவிப்பதற்காக
 • பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக
 • சுதந்திரமான முறையில் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்வதற்காக

இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டதன் முக்கியத்துவம்[தொகு]

 • தனிமனித சுதந்திரத்திற்கு வழிவகுத்தமை.
  • இதனால் இது மனித உரிமையின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது.
 • பணப் பொருளாதாரத்தை உருவாக்கியமை.
 • பெருந்தோட்டங்களை அமைப்பதற்கு வழிவகுத்தமை.
  • இதனால் இலங்கையில் ஏற்றிறக்குமதிப் பொருளாதாரம் உருவானமை.

உசாத்துணை[தொகு]

 • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
 • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998