இராச மலைப்பாம்பு
இராச மலைப்பாம்பு | |
---|---|
![]() | |
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
துணைத்தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | செதிலுடைய ஊர்வன |
துணைவரிசை: | Serpentes |
குடும்பம்: | மலைப்பாம்பு |
பேரினம்: | Python (genus) |
இனம்: | P. reticulatus |
இருசொற் பெயரீடு | |
Python reticulatus (Schneider, 1801)[1] | |
வேறு பெயர்கள் | |
|
இராச மலைப்பாம்பு அல்லது பின்னற்கோடு மலைப்பாம்பு என்பது ஒரு மலைப்பாம்பு இனம் ஆகும், இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவையே உலகின் மிக நீளமான பாம்பு மற்றும் நீண்ட ஊர்வன இனம் ஆகும். இதனால் மனிதர்களுக்கு ஆபத்து எனக் கருத முடியாது. இவற்றில் பெரிய பாம்புகள் வயதுவந்த மனிதனைக் கொல்ல போதுமான சக்தி வாய்ந்தது என்றாலும், எப்போதாவது மனிதனைத் தாக்கியதாக மட்டுமே செய்திவந்துள்ளது.
விளக்கம்[தொகு]
நன்கு நீந்தக்கூடியது இந்தப் பாம்புகள். இவற்றின் உடலின் மேற்புறத்தில் மஞ்சள் பழுப்பும் கருமையும் கலந்து காணப்படும். பெரிய உருண்டை வடிவ புள்ளிகள் வரிசையாகக் காணப்படும். இப்புள்ளிகளின் ஒரத்தில் கருமையும், மஞ்சளும் தெரியும். இப்பாம்பு கோழிகள், வாத்துகள், பூனைகள், நாய்கள், பன்றிகள் போன்ற விலங்குகளை விழுங்கிவிடும். ஆசியாவைச் சேர்ந்த இந்தப் பாம்புகளே பெரிய பாம்புகள் ஆகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராச மலைப்பாம்புகளை தெற்கு சுமத்ராவில் ஆய்வு செய்ததில் இவற்றின் நீளம் 1.5 முதல் 6.5 மீ (4.9 21.3 அடி) உள்ளதாகவும், எடை 1 முதல் 75 கிலோ எடை உள்ளதாக மதிப்பிடப்பட்டது. [4] அரிதான 6 மீட்டர் (19.7 அடி) நீள மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.[5]
குறிப்புகள்[தொகு]
- ↑ ITIS (Integrated Taxonomic Information System). www.itis.gov.
- ↑ McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
- ↑ Reynolds, R.G., Niemiller, M.L. & Revell L.J. (2014). "Toward a tree-of-life for the boas and pythons: multilocus species-level phylogeny with unprecedented taxon sampling.". Molecular Phylogenetics and Evolution 71: 201–213. doi:10.1016/j.ympev.2013.11.011. பப்மெட்:24315866.
- ↑ Shine, R., Harlow, P. S., & Keogh, J. S. (1998). The influence of sex and body size on food habits of a giant tropical snake, Python reticulatus. Functional Ecology, 12(2), 248-258.
- ↑ Wood, Gerald (1983). The Guinness Book of Animal Facts and Feats. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85112-235-9.