இராச்பூர்
இராச்பூர் Rajpur | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 21°56′N 75°08′E / 21.93°N 75.13°E | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | பர்வானி |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ என்-எம் பி |
| வாகனப் பதிவு | எம் பி |
இராச்பூர் (Rajpur) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பர்வானி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும். மத்தியப் பிரதேச அரசால் இயக்கப்படும் ஒருங்கிணைந்த எல்லைச் சோதனைச் சாவடி ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலையில், இராச்பூர் வட்டத்தில் உள்ள பல்சமுத்து என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1]
புவியியல்
[தொகு]21°56′N 75°08′E / 21.93°N 75.13°E.[2] என்ற புவியியல் ஆள்கூறுகளில் கடல் மட்டத்தில் இருந்து 225 மீட்டர் உயரத்தில் இராச்பூர் நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், இராச்பூரின் மக்கள் தொகை 20,947 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை 10718 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 10229 ஆகவும் இருந்தது. இராச்பூரின் சராசரி எழுத்தறிவு விகிதம் 76.19 % ஆகும். இது தேசிய சராசரியான 69.32%-என்பதை விட அதிகமாகும். இங்கு ஆண்களின் எழுத்தறிவு 83.64% ஆகவும் பெண்களின் எழுத்தறிவு 68.38% ஆகவும் இருந்தது. இராச்பூரின் மக்கள் தொகையில் 12.92% பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "21 माह में 16 बार महाजाम, जनता के हजारों घंटे बर्बाद". Naidunia. Jagran Group (Naidunia) (26 December 2014). 26 December 2014. https://naidunia.jagran.com/madhya-pradesh/khargone-balsamud-barwani-barrier-road-jam-273665. பார்த்த நாள்: 16 February 2015.
- ↑ Falling Rain Genomics, Inc - Rajpur
- ↑ https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999